ETV Bharat / state

சென்னை பாஜக நிர்வாகியின் கணவர் மீது தாக்குதல்; கத்தியோடு சாலையில் தப்பிச் செல்லும் புகைப்படம் வெளியானது! - BJP MEMBER HUSBAND ATTACK - BJP MEMBER HUSBAND ATTACK

BJP MEMBER HUSBAND ATTACK: சென்னை பாஜக நிர்வாகியின் கணவரை கத்தியால் தாக்கிவிட்டு ஆயுதத்தோடு தப்பிச் செல்லும் கும்பலின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தப்பி ஓடும் நபர்களின் புகைப்படம்
தப்பி ஓடும் நபர்களின் புகைப்படம் (Credit -ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 12:36 PM IST

சென்னை: சென்னை பாஜகவின் மாநில மகளிர் அணி நிர்வாகியாக பதவி வகித்து வருபவர் நதியா. இவருடைய கணவர் சீனிவாசன் வழக்கறிஞராக உள்ளார். இவர்கள் அண்ணா நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று சீனிவாசன் அண்ணா நகரில் உள்ள தனது நண்பரை சந்திக்கச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, அங்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம நபர்கள், சீனிவாசனை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில், திருமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீனிவாசனை மீட்டு திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். இந்நிலையில், தற்போது சீனிவாசன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு இணை ஆணையர் விஜயகுமார் நேரில் வந்து பார்வையிட்டு, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். நிலம் சம்பந்தமாக இந்தச் சம்பவம் அரங்கேறியதா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதமா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில், தாக்கிய கும்பல் சீனிவாசனை வெட்டிவிட்டு தப்பிச் செல்லக்கூடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இரு இளைஞர்கள் கையில் கத்தியுடன் ஆட்டோவில் தப்பிச் செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ராமேஸ்வரம் அருகே இரண்டு மீனவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு.. மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரம்! - Rameswaram Fishermen missing

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.