ETV Bharat / state

வீட்டிற்குள் புகுந்த 5அடி நீளமுள்ள சாரைப்பாம்பு: லாவகமாக பிடித்த பாம்பு பிடி வீரர்! - 5 FEET SNAKE ENTERED IN HOUSE

Snake entered house: சங்கரன்கோவிலில் வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை உயிருடன் மீட்டு பாம்பு பிடிக்கும் ஆர்வலர் அதனைப் பத்திரமாகக் கொண்டு சென்று காட்டுப்பகுதியில் விடுவித்தார்.

வீட்டிற்குள் புகுந்த பாம்பை மீட்கும் காட்சி
வீட்டிற்குள் புகுந்த பாம்பை மீட்கும் காட்சி (Photo credits to ETV Bharat tamil)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 3:58 PM IST

வீட்டிற்குள் புகுந்த பாம்பை மீட்கும் வீடியோ காட்சி (video credits to ETV Bharat tamil)

தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பாரதியார் நகரில் வசித்து வருபவர் கடற்கரை. இவர் சங்கரன்கோவில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று (மே 7) இரவு அவரது இல்லத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாகப் பாம்பு ஒன்று வீட்டுக்குள் புகுந்துள்ளது.

பாம்பு வீட்டுக்குள் வருவதைக் கண்ட சிறுவர்கள் அலறி அடித்து வீட்டுக்குள் ஓடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் கடற்கரை, சங்கரன்கோவில் பாம்பு பிடி வீரர் பரமேஸ்வரதாஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் பரமேஸ்வரதாஸ் அந்த வீட்டில் தீவிரமாகத் தேடியுள்ளார். அப்போது வீட்டில் உள்ள மின் மோட்டார் அருகே சுமார் 5 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒளிந்திருந்துள்ளது.

அதனைக் கண்ட பாம்பு பிடி வீரர் பாம்பைப் பிடிக்க முயன்ற போது, அப்பாம்பு அதிவேகமாகச் சீறியுள்ளது. இருப்பினும், அதற்கென பிரத்தியேக உபகரணங்கள் மூலம் லாவகமாக உயிருடன் மீட்டு சங்கரன்கோவில் அருகேயுள்ள காட்டுப்பகுதியில் விடுவித்தார்.

இதையும் படிங்க: “எனக்கும் சுடும்ல..” ஷூ அணிந்து துப்பு துலங்கிய மோப்பநாய்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.