ETV Bharat / state

கோயில் கணக்காளரிடம் தன் காலணியை எடுக்கச் சொல்லிய இந்து அறநிலையத்துறை இணை ஆணையர்; வீடியோ வெளியாகி பரபரப்பு! - Thiruvottiyur temple issue - THIRUVOTTIYUR TEMPLE ISSUE

Accountant was made to take slipper: திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் ஆய்வு மேற்கொள்ள வந்த இந்து அறநிலையத்துறை இணை ஆணையர், கோயில் கணக்காளரை வைத்து தனது காலணியை எடுத்து கொடுக்கச் சொல்லி மாட்டிச் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலணியை எடுக்கும் புகைப்படம்
காலணியை எடுக்கும் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 4:03 PM IST

சென்னை: திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் தண்டு உடைந்த விவகாரம் குறித்து கோயிலில் ஆய்வு மேற்கொள்ள வந்த இந்து அறநிலையத்துறை இணை ஆணையர், தனது காலணியை கோயில் கணக்காளரை வைத்து எடுத்துக கொடுக்கச் சொல்லி மாட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலணியை எடுக்கும் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவொற்றியூரில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சாமி வீதி உலாவில், கருட வாகனத்தை தூக்கும் போது திடீரென ஒருபுறம் இருக்கும் தண்டு உடைந்து சாமி சிலை சாய்ந்து கீழே சரிந்துள்ளது. இதில் பட்டாச்சாரியார் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தண்டு உடைந்த சம்பவம் குறித்து இந்து அறநிலைத்துறை இணை ஆணையர் முல்லை தலைமையிலான அதிகாரிகள் குழு, கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலுக்கு இன்று (மே.25) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: திருவொற்றியூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் திடீரென சரிந்த சிலை.. ஒருவர் காயம்! - Swami Statue Collapse

இந்நிலையில், ஆய்வு முடித்து கோயிலை விட்டு வெளியேறும் போது, சிறிய தடுப்புச் சுவர் பகுதிக்குள் இருந்த இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் முல்லையின் காலணியை அவர் நேரடியாக எடுக்காமல், கோயிலில் கணக்காளராக பணிபுரியும் பெண் ஊழியரை எடுத்து போடச் சொல்லியுள்ளார்.

அவரும் உடனடியாக தன்னுடைய கையால் இணை ஆணையரின் காலணியை எடுத்து கொடுத்துள்ளார். இந்நிலையில், அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றொருவரை தன்னுடைய காலணியை எடுத்துப் போடுமாறு கூறி மாட்டிச் சென்ற வீடியோ காட்சி தற்போது வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: திருச்சி திருவானைக்கோயில் யானை அகிலா 22வது பிறந்தநாள் கொண்டாட்டம்! - Akila Elephant Birthday

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.