ETV Bharat / state

ரூ.150க்கு பில்ல கொடுங்க.. இல்ல ரூ.140க்கு சரக்க கொடுங்க - திருவாரூர் டாஸ்மாக்கில் மதுபிரியர்கள் வாக்குவாதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 5:53 PM IST

Thiruthuraipoondi tasmac: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் மது பிரியர் ஒருவர், 150 ரூபாய்க்கு எதற்கு மதுபானம் விற்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருவாரூரில் மதுபிரியர்கள் வாக்குவாதம்!
திருவாரூரில் மதுபிரியர்கள் வாக்குவாதம்!
திருவாரூர் டாஸ்மாக்கில் மதுபிரியர்கள் வாக்குவாதம்

திருவாரூர்: தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தேனி, தர்மபுரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்திற்காக, கடையின் எண் குறிப்பிட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூல் செய்யும் திட்டம் நேற்று முன்தினம் (ஜன.19) தொடங்கப்பட்டது.

அதன்படி, திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மதுபான கடைகளில் ஏற்கனவே பத்து ரூபாய் கூடுதலாக விற்கப்பட்டு வந்த மது வகைகள் தற்போது பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தின் காரணமாகக் கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மது பிரியர்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் மது பிரியர் ஒருவர், 150 ரூபாய்க்கு எதற்கு மதுபானம் விற்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில், நான் எடையூரிலிருந்து வருகிறேன். நான் அங்கு சென்று குடித்து விட்டு, 10 ரூபாய்க்காகத் திரும்பக் கொண்டு வந்து பாட்டிலை எப்படித் தர முடியும் என்று கேட்டு, கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். மேலும் அவர், இந்த கடையில் பார் வசதி இல்லை வழியில் எங்கேயாவது குடித்தாலும் காவல்துறையினர் பிடிக்கின்றனர். வீட்டில் சென்று தான் குடிக்க முடியும். அப்படிக் குடித்து விட்டு பாட்டிலைக் கொடுப்பதற்காக நான் எவ்வளவு தூரம் வர முடியும்.

ஒன்று 150 ரூபாய்க்கு எனக்கு பில்ல கொடுங்கள் இல்லனா. 140 ரூபாய்க்கு மதுபானம் கொடுங்கள். பாட்டிலைத் திருப்பி கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். மேலும் அருகில் மது வாங்க வந்தவர்களையும் தயவு செய்து யாரும் வாங்க வேண்டாம்.

150 ரூபாய்க்கு மதுபானம் விற்க வேண்டும் என்று எந்த டிவியில் வந்தது, எந்த பேப்பரில் வந்தது சொல்லுங்க என்று தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசுக்கு போன் பண்ணுங்க போலீஸ் வரட்டும் பேசிக்கலாம் என்று மது பிரியர் கூறும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பாட்டிலுக்கு ரூ.10... மது பிரியர்கள் மற்றும் டாஸ்மார்க் ஊழியர்கள் திண்டாட்டம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.