ETV Bharat / state

ரூ.16,425 மட்டுமே செலவு.. சென்னையின் அடையாளமாக திகழும் விக்டோரியா அரங்கம்.. நீங்கள் அறிந்திடாத தகவல்! - madras day 2024 - MADRAS DAY 2024

Madras Day 2024 : சென்னை தினம்(மெட்ராஸ் டே) கொண்டாடப்படும் நிலையில் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் 'விக்டோரியா பொது அரங்கம்' பற்றி விவரிக்கிறது இச்செய்தி தொகுப்பு.

விக்டோரியா பொது அரங்கம்
விக்டோரியா பொது அரங்கம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 6:44 PM IST

சென்னை: ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் ஏதுமின்றி அனைவருக்கும் அடைக்கலம் தந்து 'வந்தாரை வாழ வைக்கும் சென்னை' என்ற சிறப்புப் பெயரோடு அழைக்கப்படுகிறது நம்ம சென்னை. அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சென்னை நகரை 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் நாள் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி கண்டுபிடித்தாக கூறப்படும் நாளை, 2004 ஆம் ஆண்டு முதல் 'மெட்ராஸ் டே' கொண்டாடி வருகிறோம்.

ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர் சீனிவாசன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னைக்கென்று பல்வேறு அடையாளங்கள் உள்ளன. அதில், முக்கிய அடையாளமாக திகழ்கிறது விக்டோரியா பொது அரங்கம். இங்கிலாந்து ராணி விக்டோரியா பெயரில் சென்னையில் கட்டப்பட்டது தான் விக்டோரியா பொது அரங்கம். இந்த அரங்கம் சென்னை ரிப்பன் கட்டடம் மற்றும் சென்டரல் ரயில் நிலையத்தின் மையத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

விக்டோரியா அரங்கம் அமைந்த வரலாறு: அந்த காலத்தில் சென்னையில் வசித்து வந்த முக்கிய பிரமுகர்கள் அனைவரும் ஒன்று கூடி கலைகளைப் பார்க்க விரும்பினர். இதையடுத்து 25,883 சதுர அடி பரப்பளவில், கடந்த 1886 ஆம் ஆண்டு விக்டோரியா பொது அரங்கம் கட்டடம் கட்ட துவங்கப்பட்டு 1890 ஆம் ஆண்டு நிறைவுற்றது.

திருவிதாங்கூர் மகாராஜா, மைசூர் மகாராஜா, புதுக்கோட்டை அரசர் என முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பலரின் நன்கொடை உதவியால் அப்போது ரூ.16,425 செலவில் விக்டோரியா பொது அரங்கம் கட்டப்பட்டது. பிரிட்டன் கட்டடக் கலையில், சென்னையில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக விக்டோரியா பொது அரங்கம் திகழ்கிறது.

கூவம் ஆற்றின் பார்வையில் விக்டோரியா அரங்கம்
கூவம் ஆற்றின் பார்வையில் விக்டோரியா அரங்கம் (Credit - ETV Bharat Tamil Nadu)

விக்டோரியா அரங்கம் அமைப்பு: மூன்று தளங்கள் கொண்ட இந்த அரங்கத்தில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் அருங்காட்சியகமும், நூலகமும் இருந்துள்ளது. முதல் தளத்தில் நாடக அரங்கேற்றமும், பல்வேறு கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது.

தலைவர்கள் விசிட்: மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர். சர்தார் வல்லபாய் படேல் போன்ற தேசிய தலைவர்கள் விக்டோரியா பொது அரங்கத்தில் கூட்டங்களில் உரையாற்றி உள்ளனர். தமிழ் நாடகங்களை அரங்கேற்றியுள்ளனர். சென்னையில் முதல் சினிமா காட்சி விக்டோரியா பொது அரங்கத்தில் நடைபெற்றது.

புனரமைக்கும் பணி: இப்படி 130 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட விக்டோரியா பொது அரங்கம் புனரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ரூ.32 கோடி செலவில், 2 ஆண்டுகளில் புனரமைக்கும் பணிகளை முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர் சீனிவாசன்
ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர் சீனிவாசன் (Credit - ETV Bharat Tamil Nadu)

விக்டோரியா பொது அரங்கம் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் சிறப்பு பேட்டி அளித்த ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர் சீனிவாசன், "விக்டோரியா பொது அரங்கம் அரசாங்கத்தினால் கட்டப்படாமல் மக்களால் பணம் பெற்று கட்டப்பட்டது. ஆங்கிலேயர்களின் பொழுதுபோக்கிற்காக திரைப்படம், நாடகம் பார்க்க தலைமைச்செயலகத்தினுள் அரங்கம் இருந்தது. ஆனால், பொதுமக்கள் பார்க்க பொது அரங்கம் வேண்டும் என்பதால் விக்டோரியா பொது அரங்கம் கட்டப்பட்டது.

விவேகானந்தர், காந்தி, பெரியார், அண்ணா போன்ற இந்தியாவின் மிக முக்கிய தலைவர்கள் விக்டோரியா பொது அரங்கத்தில் பேசியுள்ளார்கள். கடந்த 1895 ஆம் ஆண்டு சினிமா காலுன்ற துவங்கி காலத்தில், முதன்முறையாக விக்டோரியா பொது அரங்கத்தில் சினிமா திரையிடப்பட்டது. பல முக்கிய நாடகங்கள் இல்லாமல் சினிமா பரிசோதனைகளும் விக்டோரியா பொது அரங்கத்தில் நடந்துள்ளது. தற்போது புனரமைக்கப்பட்டு வரும் இந்த அரங்கம் சினிமா அருங்காட்சியகமாக மாற்றப்பட வேண்டும்.

பழைய திரைப்படங்களை திரையிடுவது, சினிமா துவங்கிய காலத்திலிருந்து தற்போது வரை உள்ள சினிமா வரலாற்று தொடர்பான புகைப்பட கண்காட்சி அமைப்பது உள்ளிட்ட விக்டோரியா பொது அரங்கத்தை சினிமா அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும். ஆங்கிலேயர்கள் வந்த பிறகுதான் மெட்ராஸ் வந்தது போல பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்கு முன்பாகவே மீனவ கிராமங்களாக சென்னை இருந்திருக்கிறது.

விக்டோரியா அரங்கம்
விக்டோரியா அரங்கம் (Credit - ETV Bharat Tamil Nadu)

மாதரசன் பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே பெண்ணையாற்று மடத்தில் உள்ள கல்வெட்டுகளில் மாதரசன் பட்டணத்தைப் பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன. மாதரசன் பட்டணம், நீலகங்கரையன் பட்டணம், கோவளம் பட்டணம் உள்ளிட்ட பல பெயர்கள் இருந்துள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மாதரசன் பட்டனம் தான் தற்போது மெட்ராஸ் என்று உள்ளதாகவும், ஆங்கிலேயர்களுக்கு முன்பாகவே மெட்ராஸ் இருக்கிறது. சென்னையின் அடையாளத்தை நிலை நிறுத்தி வரும் விக்டோரியா பொது அரங்கம் மீண்டும் புதுப்பொலிவை பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : எருமை தான் எனக்கு வாகனம்: மாற்றுத்திறனாளியின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன? - disabled old man request

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.