ETV Bharat / state

"பெண் யானைகளிடம் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டால் தாக்கக்கூடும்"- கால்நடை மருத்துவர்கள் தரும் விளக்கம்! - TIRUCHENDUR ELEPHANT ATTACK

பெண் யானைகளுக்கு மதம் பிடிக்குமா? அப்படியானால் எந்த நேரத்தில் பெண் யானைகள் ஆக்ரோஷமடையும் என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

யானை
யானை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2024, 10:39 AM IST

திருநெல்வேலி: பெண் யானைகளுக்கு மதம் பிடிக்குமா? அப்படியானால் எந்த நேரத்தில் பெண் யானைகள் ஆக்ரோஷமடையும் என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பெண் யானை தெய்வானை தாக்கியதில் நேற்று இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உதவி பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் இருவரும் யானைக்கு உணவளித்த போது திடீரென யானை மதம் பிடித்தது போல் நடந்து கொண்டதாகவும், பின்னர் தும்பிக்கையால் இருவரையும் தாக்கியதில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

யானையை எரிச்சலூட்டும் சம்பவம் நடந்துள்ளது: தமிழ்நாட்டில் இதுபோன்று கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் மதம் பிடித்து யாரையும் தாக்கியது இல்லை. ஆனால் திருச்செந்தூரில் உள்ள யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாக அறிந்து கொள்வதற்காக ஈடிவி பாரத் சார்பில் கால்நடை மருத்துவர் மனோகரனை தொடர்பு கொண்ட போது அவர் கூறியதாவது, "பொதுவாக ஆண் யானைகளுக்கு தான் மதம் பிடிக்கும் பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பதில்லை. அதே சமயம் பெண் யானைகளிடம் யாரேனும் எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டால் கோபத்தின் மிகுதியில் பெண் யானைகள் இதுபோன்று மனிதர்களை தாக்க நேரிடும். எனவே, இந்த சம்பவத்திலும் யானையை எரிச்சலூட்டும் வகையில் ஏதாவது சம்பவம் நடந்திருக்க வேண்டும். அதன் காரணமாகவே யானை இந்த அளவுக்கு அவர்களை தாக்கியிருக்கலாம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அசாமில் இருந்து திருச்செந்தூர் வந்த யானை! பிரேரோனா தெய்வானை ஆனது எப்படி?

பாலூணர்வு தூண்டும் நேரத்தில் மதம் பிடிக்கும்: அதேபோல், இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத மற்றொரு கால்நடை மருத்துவர் ஈடிவி பாரத் தமிழ் தமிழ்நாடிடம் கூறும் போது, "பொதுவாக யானைகளுக்கு மதம் பிடிக்கும் என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டோம். யானைகளுக்கு மத நீர் வடியும் அந்த சமயத்தில், யானைகள் ஆக்ரோஷமாக மனிதர்களை தாக்கும். ஆண் யானைகளுக்கு மட்டும் அல்லாமல், பெண் யானைகளுக்கும் சில நேரங்களில் இதுபோன்று மதம் பிடிக்கும் நிகழ்வு நடைபெறும்.

ஆனால் அந்த நேரத்தில் ஆண் யானைகளை போன்று பெண் யானைகள் மிகவும் ஆக்ரோஷமாக வெறி பிடித்ததை போன்று நடந்து கொள்ளாது. பொதுவாக பெண் யானைகளுக்கு பாலூணர்வு தூண்டப்படும் நேரத்தில் அதாவது கருமுட்டைகள் உருவாகும் நேரத்தில் பெண் யானைகளுக்கு ஒரு சுரப்பி வடியும் அந்த நேரத்தில் பெண் யானைகள் உடல் சோர்ந்து காணப்படும். மிகவும் அசௌகரியமான நிலைய உணரும். எனவே அந்த நேரத்தில் யானைகளை யாராவது எரிச்சலூட்டும் விதமாக நடந்து கொண்டால் கோபத்தில் அது மனிதர்களை தாக்கும்.

காட்டு விலங்கு காட்டு விலங்கு தான்: இருந்தாலும், உடனடியாக யானை இந்த நிலைக்கு செல்லாது. அதற்கு பாலுணர்வு தூண்டுவது போன்று இருந்தால் முன்கூட்டியே சில அறிவகுறிகளை காட்டியிருக்கும். யானையுடன் நன்கு பழக்கம் கொண்ட பாகன்கள் அந்த சமயத்தில் அருகில் இருந்தால், அதை கவனித்து அதற்கேற்றது போல் யானையின் நடவடிக்கையை மாற்றுவார்கள். ஆனால், இந்த சம்பவத்தின்போது கைதேர்ந்த அனுபவம் மிக்க பாகன்கள் அருகில் இருந்தார்களா? என்பது தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் அங்கு இல்லாததால் தான் பிரச்சனை ஏற்பட்டதா? என்பதும் தெரியவில்லை.

எது எப்படியோ, காட்டு விலங்கு காட்டு விலங்கு தான். காட்டு விலங்குகளுக்கான குணம் உள்ளுக்குள் இருக்கும். எப்போதாவது அது வெளிப்படும். பொதுவாக மனிதர்களே விலங்குகளை போன்று தான் நடந்து கொள்கிறார்கள். சில சமயத்தில் அவர்கள் வெறித்தனமாக பிறரை தாக்குவது நடைபெறுகிறது. அந்த வகையில் காட்டு விலங்கு அதற்கான சூழல் ஏற்படும் போது தனது குணாதிசயங்களை வெளிப்படுத்தும்.

எந்த நேரத்தில் பெண் யானைகள் ஆக்ரோஷமடையும்: பொதுவாக ஆண் யானைகளுக்கு மத நீர் வடியும் போது பாலுணர்வு தூண்டப்படும். எனவே அந்த நேரத்தில் பெண் யானையுடன் இணை சேர்வதற்காக பெண் யானைகளை தேடி அவை அலையும். காட்டுக்குள் பொதுவாக வயதுக்கு வந்த பெண் யானைகள் ஒரு குழுவாக சுற்றித் திரியும். மத நீர் வடியும் யானை பெண் யானையை தேடி வரும்போது, மற்றொரு மத நீர் வடிந்த யானை அதே பெண் யானையை விரும்பினால், இரண்டு ஆண் யானைகளில் எந்த யானை வலிமையாக இருக்கிறதோ, அந்த யானையையே பெண் யானை தேர்வு செய்யும்.

தனக்கு பிடிக்காத ஆண் யானையை பெண் யானைகள் விரட்டி விட்டு விடும். அதேபோல் இணை சேரும்போது முழுமையான திருப்தி கொடுக்காத ஆண் யானைகளை பெண் யானைகள் கோபத்தோடு தாக்கும் சம்பவமும் நடைபெற்றுள்ளது. பெண் யானைகளுக்கு கருமுட்டை உற்பத்தியாகும் போது, ஒரு சுரப்பி நீர் போன்று வடியும். அந்த நேரத்தில் முன்னெச்சரிக்கையாக பாகன்கள் யானையை கவனிக்க வேண்டும்.

பெண் யானைகளுக்கு மதம் பிடித்தாலும், கூட ஆண் யானைகளை போன்று மிகவும் மூர்க்கமாக நடந்து கொள்ளாது. பொதுவாக யானை மதம் பிடித்தால் மனிதர்களை காலால் மிதித்து சக்கையாக பிழிந்த பிறகு தான் உடலை விடும். ஆனால் பெண் யானைகள் கோபப்படும்போது அது போன்று நடந்து கொள்வதில்லை. தும்பிக்கையால் தள்ளுவது போன்றும், காலால் எட்டி உதைப்பது போன்ற நடவடிக்கையில் தான் ஈடுபடும்" என்று தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.