ETV Bharat / state

லாக்கப் மரண வழக்கு: இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசாருக்கு 7 ஆண்டு சிறை- வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு! - lockup murder case verdict - LOCKUP MURDER CASE VERDICT

lockup murder case verdict: முன்னாள் மத்திய பாதுகாப்பு படை வீரரின் காவல் மரண வழக்கில், காவல் ஆய்வாளர் முரளிதரன் உள்பட மூன்று போலீசாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதத் தொகையும் விதித்து வேலூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

வேலூர் நீதிமன்றம், காவல் ஆய்வாளர் முரளிதரன்
வேலூர் நீதிமன்றம், காவல் ஆய்வாளர் முரளிதரன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 7:21 AM IST

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் சுகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அதே பகுதியை சேர்ந்த முன்னாள் மத்திய பாதுகாப்பு படை வீரர் கோபி (எ) கோபால் (வயது 43) என்பவரை கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி குடியாத்தம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவரை குடியாத்தம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யாமல் பக்கத்து காவல் நிலையமான மேல்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளனர்.

அப்போது, மேல்பட்டி காவல் நிலையத்திலேயே கோபி (எ) கோபால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவரது மரணம் குறித்து மனைவி சுமலதா புகார் அளித்த நிலையில், உள்ளூர் காவல் துறை விசாரணைக்கு பின், இவ்வழக்கை 2017ஆம் ஆண்டு முதல் வேலூர் சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு விசாரணை வேலூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில் காவல் மரணம் தொடர்பாக அப்போதைய குடியாத்தம் தாலுக்கா காவல் நிலைய காவல் ஆய்வாளர் முரளிதரன் மற்றும் முதன்மை காவலர் உமா சந்திரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஓய்வு பெற்ற SSI இன்பரசனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து வேலூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி முனைவர் முருகன் உத்தரவிட்டார்.

தற்போது ஆய்வாளர் முரளிதரன் வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் ஆய்வாளராகவும், தலைமை காவலர் உமாசந்திரன் பரதராமி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து, மூன்று பேரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசு பள்ளி ஆசிரியர் போக்ஸோவில் கைது! - school teacher arrested under POCSO

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.