ETV Bharat / state

வளைகாப்பு செய்வது போல் ரீல்ஸ் வெளியிட்ட மாணவிகள்.. பள்ளிக்கு சென்று கலெக்டர் கொடுத்த அட்வைஸ்!

காட்பாடி காங்கேயநல்லூர் பள்ளி மாணவிகள் வளைகாப்பு செய்வது போல் ரீல்ஸ் வெளியிட்ட பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் சென்று மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி
மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: தமிழக முதலமைச்சரின் முக்கிய திட்டங்களில் ஒன்றான 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி மாதத்திலும் ஏதாவது ஒரு புதன்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் காலை 9 மணி முதல் அடுத்த நாள் காலை 9 மணி வரை 24 மணி நேரம் சம்பந்தப்பட்ட வட்டத்திற்குள்ளேயே தங்கி, அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து, அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுவர்.

அதன்படி வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று காலை 10.00 மணி முதல் இன்று காலை வரை ஆய்வுகளைச் செய்தார். இதில் காட்பாடி விருதம்பட்டு மாநகராட்சி உருது ஆரம்ப பள்ளி மற்றும் காந்திநகர் கிழக்கு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பேச்சு (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த ஆய்வின்போது மாணவ, மாணவிகளுக்கு இன்று வழங்கப்பட்ட உணவின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் நாள்தோறும் அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி சரியான நேரத்தில் உணவு வழங்கப்படுகிறதா என்பதையும், வழங்கப்பட்ட அட்டவணையின்படி உணவு சமைக்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார்.

ஆட்சியரின் அறிவுரை: தொடர்ந்து காட்பாடி அருகே உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். அப்போது மாவட்ட ஆட்சியர் பேசியதாவது," ஒவ்வொரு வருக்கும் 12 ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்க வேண்டும்.

ஒரு மனிதனுக்கு தன்னுடைய வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான காலம் எதுவென்றால் பள்ளி பயிலும் காலமே ஆகும். ஒவ்வொருவருக்குமே தனித்தனி திறமைகள் உள்ளது. முழு மதிப்பெண் பெறுபவர்கள் மட்டுமே திறமையுள்ளவர்கள் கிடையாது. ஒவ்வொருவருக்கும் உள்ள திறமைகளை கண்டறிந்து வெளியே கொண்டு வர வேண்டும். இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு பாடத்திட்டத்தை படித்தாலும் நன்றாக படித்தால் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன.

மாணவிகள் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், கைப்பேசி என்பது தொலைத் தொடர்பிற்காகவும் தகவல் தொடர்பிற்காகவும் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சாதனம். அதை அறிவு சார்ந்த தேடல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாழ்க்கைக்கும், குடும்பத்திற்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய செயல்களுக்கு பயன்படுத்தக்கூடாது.

படிப்பு, ஒழுக்கம், உழைப்பு மற்றும் மனஉறுதி இவை மட்டுமே வாழ்க்கையில் நமக்கு மகிழ்ச்சியைத் தேடித் தரும். மாணவிகள் ஒவ்வொருவரும் படிப்பில் கவனம் செலுத்தி பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என பேசினார்
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், வேலூர் வருவாய்க் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வளைகாப்பு விழா! ரீல்ஸ் மோகத்தில் மாணவிகளின் பகீர் செயல்

பள்ளி வளாகத்தில் வளைகாப்பு விழா: முன்னதாக இந்த பள்ளி வளாகத்தில் சில மாணவிகள் சேர்ந்து, சக மாணவிக்கு பத்திரிகை அடித்து வளைகாப்பு விழா நடத்தி, அதனை ரீல்ஸ் வீடியோவாக இணையத்தில் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்து இருந்தது. இதனை தொடர்ந்து இப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பாட்டர்.

இந்தநிலையில் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட மாணவிகள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களுக்கு சூகமாக அறிவு வழங்கினார். மேலும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை மீண்டும் பணிக்கு வருமாறு உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.