ETV Bharat / state

அரக்கோணம் அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து.. நான்கு பேர் காயம்! - venkatesapuram

arakkonam accident: அரக்கோணம் அருகே லாரி, ஆட்டோ, கார் என அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

arakkonam accident
அரக்கோணம் விபத்து
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 8:00 PM IST

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரத்தில் இந்திய கடற்படை விமான தளம் இயங்கி வருகிறது . இந்த வளாகத்தில் கழிவுநீர் (செப்டிக் டேங்க்) லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. இதனால் பழுதாகி நின்ற கழிவு நீர் லாரியை கயிறு கட்டி இன்னொரு லாரி இழுத்துக் கொண்டு வந்தது.

இந்த லாரிகள் அரக்கோணம் - காஞ்சிபுரம் சாலையில் வெங்கடேசபுரத்தில் உள்ள பாலத்தில் சென்று கொண்டும் இருக்கும் போது திடீரென லாரிகளுக்கு இடையான கயிறு அறுந்துள்ளது .இதில் நிலை தடுமாறி எதிரே வந்த ஷேர் ஆட்டோ மீது லாரி வேகமாக மோதியது.

இந்த வேகத்தில் ஆட்டோ பின்னோக்கி செல்ல, பின்னால் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் ஆகிய வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த திருவள்ளூர் மாவட்டம் திருவாலாங்காட்டைச் சேர்ந்த மகேந்திரன் (58), அவரது மனைவி விமலா (35), ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த திருவாலங்காடு பார்த்தசாரதி (48), ஆட்டோ டிரைவர் அரக்கோணம் அம்மனூர் ரவி ஆகிய 4 பேர் படு காயமடைந்தனர். இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அரக்கோணம் நகர காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் அங்கு வந்து, விபத்தில் காயமடைந்த 4 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காகத் திருவள்ளுவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதன் காரணமாக வெங்கடேசபுரத்தில் சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏறப்பட்டது.

இதற்கிடையில் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை அரக்கோணம் நகர காவல் துறையினர் தேடி வருகின்றனர். வெங்கடேசபுரத்தில் லாரி, ஆட்டோ, கார் என அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிய விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:குற்றங்களைக் குறைப்பதற்காக 3 செயலி.. மூத்த குடிமக்களுக்கு உதவும் திட்டத்தைத் துவங்கி வைத்த டிஜிபி சங்கர் ஜிவால்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.