ETV Bharat / state

ஆம்பூர் அருகே சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து; 4 வீரர்கள் படுகாயம்! - CRPF Officer Vehicle Accident ambur

CRPF vehicle accident: ஆம்பூர் அருகே துணை ராணுவப் படை வீரர்கள் (சி.ஆர்.பி.எப்) சென்ற வாகனம் சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 4 துணை ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.

ஆம்பூர் அருகே சி.ஆர்.பி வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 5:28 PM IST

திருப்பத்தூர்: ஆவடி துணை ராணுவ பயிற்சி மையத்தைச் சேர்ந்த 71 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் பயிற்சி முடித்து விட்டு மீண்டும் இன்று 5 இராணுவ வாகனத்தில் ஆவடி பயிற்சி மையத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் துணை இராணுவ வீரர்கள் ஓட்டி வந்த வாகனம், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், 4 சி.ஆர்.பி.எப் வீரர்கள் படுகாயமடைந்தனர். மேலும் வாகனத்தை ஓட்டிச் சென்ற ரிஜோ மற்றும் சின்னதுரையின் கால் வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கி துண்டானது. அதனைத் தொடர்ந்து நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு இருவரையும் லாரியின் இடிபாடுகளிலிருந்து சக வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அரசு மருத்துவமனையில் தலைமை காவலர் ராமச்சந்திரன் மற்றும் காவலர் வல்லவன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இவ்விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: திருப்பத்தூரில் உரிய ஆவணமற்ற ரூ.2 லட்சம் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.