சென்னை: கோயம்பேடு சந்தைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழக மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பலவகையான காய்கறிகள் வருகிறது. காய்கறிகளைப் பொறுத்தவரை, கடந்த 20 நாட்களுக்கு மேலாக விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும், தக்காளியின் விலை உயராமல் இருந்தது.
இந்நிலையில், தக்காளி விலை உயர்ந்துள்ளது. இது குறித்து கோயம்பேடு தக்காளி வியாபாரி தியாகராஜன் கூறுகையில், கடந்த 2 தினங்களாக தக்காளி வரத்து குறைவானதால், தக்காளி விலை நேற்றைய முன்தினம் கிலோ 60 ரூபாய்க்கும், நேற்றைய தினம் 10 ரூபாய் குறைந்து கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார். தினமும் 800 டன் வர வேண்டிய தக்காளி வரத்து, 500 டன் ஆக குறைந்துள்ளதால், கடந்த சில தினங்களாக கிலோ 35 ரூபாய் விற்பனையான தக்காளி கிலோ 60 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக கூறினார்.
இதேபோல், கோயம்பேடு சந்தைக்கு தினமும் 450 - 500 வரை காய்கறி வாகனம் வர வேண்டிய நிலையில், தற்போது 350 வாகனங்கள் தான் வருகிறது எனவும், பீன்ஸ் வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் பீன்ஸ் விலை தொடர்ந்து ஏறி வருகிறது எனவும் தெரிவித்தார்.
பீன்ஸ் கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 170 ரூபாய்க்கும், கேரட் கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.55க்கு விற்கப்படுகிறது. வெண்டைக்காய், சௌசௌ, முள்ளங்கி ஆகியவை கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பாகற்காய், பீர்க்கங்காய் கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 50 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது.
மேலும் முருங்கைக்காய், கத்திரிக்காய் கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெயிலின் தாக்கத்தாலும், தென் மாவட்டங்களில் கன மழையின் காரணமாகவும் வரத்து குறைந்ததால், காய்கறி விலை சற்று உயர்ந்தது. இதனிடையே 20 நாட்களாக தக்காளி விலை உயர்ந்த நிலையில் இருந்த தக்காளி விலை இன்று குறைந்துள்ளது.
இதையும் படிங்க: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு... தக்காளி கிலோ எவ்வளவு தெரியுமா? - Tomato Price Hike In Koyambedu