ETV Bharat / state

ஐஐஎம் போட்டியில் சாதித்த பெண் ஆட்டோ ஓட்டுநர்கள்; இவர்களின் பிசினஸ் மாடல் என்ன? - WOMEN AUTO DRIVERS

ஐஐஎம் கேரளா கோழிக்கோட்டில் நடைபெற்ற இளம் தொழில் முனைவோர் போட்டியில் சென்னையை சேர்ந்த வீர பெண்கள் முன்னேற்ற சங்கத்தின் பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் வெற்றி பெற்று முதல் பரிசு வென்றுள்ளனர். பிசினஸ் மாடல்

'வீர பெண்கள் முன்னேற்ற சங்கத்தின்' தலைவி மோகன சுந்தரி
'வீர பெண்கள் முன்னேற்ற சங்கத்தின்' தலைவி மோகன சுந்தரி (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2024, 3:02 PM IST

சென்னை: ஐஐஎம் கேரளா கோழிக்கோட்டில் (இந்திய மேலாண்மை நிறுவனம்) ஆண்டுதோறும் இளம் தொழில் முனைவோருக்கான போட்டிகள் நடைபெறும். இந்த போட்டிகள் வேளாண் தொழில்நுட்பம், பராமரிப்புப் பொருளாதாரம் மற்றும் புதிய வித வியாபாரங்கள் போன்றவற்றை மையமாக கொண்டு நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் தங்களது தொழில் திட்டங்களை திறமையாக விளக்கி கூற வேண்டும். இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் ஒரு ஆண்டு கால வழிகாட்டல் திட்டம் வழங்கப்படும்.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான போட்டி கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் சென்னையை சேர்ந்த “வீர பெண்கள் முன்னேற்ற சங்கத்தின்” பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றுள்ளனர்.

ஆங்கிலம் தெரியல, பயமா இருந்துச்சு:

வெற்றி பெற்ற கோப்பையுடன் ஐஐஎம் போட்டியில் வீர பெண்கள் சங்கத்தினர்
வெற்றி பெற்ற கோப்பையுடன் ஐஐஎம் போட்டியில் வீர பெண்கள் சங்கத்தினர் (ETV Bharat Tamil Nadu)

இது குறித்து, போட்டியில் கலந்து கொண்ட 'வீர பெண்கள் முன்னேற்ற சங்கத்தின்' தலைவி மோகன சுந்தரி நமது ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “அந்த போட்டிக்காக இணையத்தில் பதிவு செய்தோம். இந்த போட்டியில் 50 அணியினர் (கூட்டுறவு சங்கத்தினர்) அவர்களது பிசினஸ் மாடலுடன் கலந்து கொண்டனர். சென்னையில் இருந்தும் பலர் கலந்து கொண்டனர். நாங்கள் பெண் ஓட்டுநர்களாக 4 பேர் கொண்ட அணியாக இதில் கலந்து கொண்டோம்.

இந்த போட்டி 3 சுற்றாக நடைபெற்றது. அதில் ஒரு சுற்றில் கேரள முன்னாள் அமைச்சரிடம் 2 நிமிடத்தில் எங்களது பிசினஸ் மாடல் குறித்து விளக்க சொன்னார்கள். நாங்கள் 1.30 நிமிடங்களில் விளக்கி முடித்துவிட்டோம். அப்போது அந்த முன்னாள் அமைச்சர் ’இது குறித்து வருங்காலத்தில் உதவி தேவைப்பட்டால் தெரியபடுத்துங்கள்’ என்றார். ’நல்ல பிசினஸ் மாடல்’ என கூறினார். அது எங்களுக்கு ஊக்கமளித்தது. பின் அடுத்த சுற்றில் 12 நிமிடங்களில் பிசினஸ் மாடலை விளக்க சொன்னார்கள்.

அனைத்து போட்டியாளர்களும் ஆங்கிலத்தில் விளக்கினர். ஆனால் எங்களுக்கு தமிழ் மட்டுமே தெரிந்ததால் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, பின்னர் விளக்கினோம். எப்படியாவது டாப் 10இல் ஆவது இருக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால் முதல் பரிசு பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி. அங்கு சான்றிதழ்கள், கோப்பைகள் மற்றும் 50,000 ருபாய் காசோலையை பரிசாக வழங்கினார்கள்.

400க்கும் மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநராக உள்ளோம்:

"தனிப்பட்ட நபராக இங்கு தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுநராக எங்களால் அரசாங்கத்திடம் இருந்து உதவிகளை பெற முடியவில்லை. அதனால் நாங்கள் ஒரு சங்கம் அமைக்கும் முடிவுக்கு வந்தோம். அப்படி நாங்கள் தொடங்கியது தான் "வீர பெண்கள் முன்னேற்ற சங்கம்". இந்த சங்கத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்தோம்.

இதையும் படிங்க: "இரும்பு பெண்மணி" ஜெயலலிதாவின் நினைவும்.. அதிமுக தொண்டர்களின் மனமும்..

முதலில் ஓலா, உபர், ராபிடோ போன்ற செயலிகளில் இருந்து சவாரி வரும். ஆனால் அதன் வழி வரும் சவாரிகளும் கால போக்கில் குறைய தொடங்கியது. அப்போது எங்களுக்கு ஒரு யோசனை வந்தது ஓலா, உபர் போல் நாம் ஏன் எதாவது இணையம் அல்லது செயலி மூலம் சவாரியுடன் இணைக்கூடாது என எண்ணிணோம். இது வரை சென்னையில் 400க்கும் மேற்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும் இணைத்து ஒரு வாட்ஸ் ஆப் குழு அமைத்தோம். அதில் எங்கே ஆட்டோ சவாரி தேவைப் படுகிறது என்ற தகவல்களை பகிர்ந்து கொள்வோம்.

70 சதவீத பெண்கள் தனியாக குழந்தைகளை வளர்ப்பவர்கள்

ஐஐஎம் போட்டியில் வீர பெண்கள் சங்கத்தினர்
ஐஐஎம் போட்டியில் வீர பெண்கள் சங்கத்தினர் (ETV Bharat Tamil Nadu)

கூட்டம் அதிகமாக கூடும் இடங்களை பெரும்பாலும் தேர்தெடுத்து ஆட்டோ தேவைகளை கண்காணிப்போம். பின் நாங்களே ஒரு “பிசினஸ் மாடல்” உருவாக்க வேண்டும் என நினைத்தோம். ஒரு கார்பெரட் கம்பெனி என்றால் அதில் நிச்சயம் பெண்கள் இருப்பார்கள்.

அவர்களுக்கு கம்பெனி போக்குவரத்து சேவை தரும் அதற்கு ஏன் நாம் ஊதியத்திற்கு வேலை செய்யாமல், ஒப்பந்த முறையில் வேலை செய்ய கூடாது என்ற யோசனை செய்தோம். இது குறித்து சங்கத்தில் பேச்சுவார்த்தை நாடத்தினோம். எங்களது சங்கத்தில் இருக்கும் 70 சதவீத பெண்கள் (single parent) தனியாக குழந்தைகளை வளர்ப்பவர்கள்.

பிசினஸ் மாடல் உருவக்க நினைத்தோம்:

முதலில் அனைவரும் இது சாத்தியமா? என கேட்டனர். பின் அதை செயல்படுத்தி பார்க்க நினைத்தோம். அந்த சமயத்தில் தான் எங்களுக்கு விஜய் என்பவர் ஐஐஎம் கேரளாவில் நடைபெறும் போட்டி குறித்து கூறினார்.

ஆட்டோ ஓட்டுவதும் தொழில்தான் ஆனால், இதற்கென அங்கீகாரம் பெரியளவில் இல்லை. எங்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. கார்பரெட், அரசு வேலை போல் இங்கு பி.எஃப், இஎஸ்ஐ, ஊதியத்துடன் விடுமுறையெல்லாம் இல்லை. மேலும் எங்களுக்கு கடன் உதவிகள் அதிகளவில் கிடைப்பதில்லை. அரசாங்கத்தில் உதவி கேட்டாலும் கண்டு கொள்ளமாட்டார்கள்.

நான் முதலில் பிசினஸ் ஃபீல்டில் இருந்தேன். பின் இந்த ஆட்டோ ஓட்டும் தொழிலுக்குள் வந்தேன். பெண் ஆட்டோ ஓட்டுநராக நான் அனுபவித்த அவமானங்கள் அதிகம். இந்த ஃபீல்டில் எப்படி பிசினஸ் ஓரியண்ட்டடாக மாற்றுவது என சிந்தித்தேன். இதற்கு நாங்களை ஒரு கம்பனி மாடலாக மாற வேண்டும் என திட்டமிட்டு, இந்த பிசினஸ் மாடல் உருவாக்கினோம்.

வீர பெண்கள் முன்னேற்ற சங்கத்தின் சவால்கள்:

தொடக்கத்தில் 20 பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் தான் இந்த வீர பெண்கள் முன்னேற்ற சங்கத்தில் இருந்தோம். அப்போது எங்களுக்குள் சவாரிகளை மாற்றி எடுத்துக் கொள்ளுவோம். சவாரிக்கு வருபவர்கள் பெண் ஓட்டுநரா? புதிதாக உள்ளதே.

இது வரை யாரையும் பார்த்ததில் என கூறுவார்கள். அப்போது யோசிப்போம் இத்தனை பேர் உள்ளோம் ஏன் யாருக்கும் தெரியவில்லை, புதிதாக பார்க்கின்றனர் என்று. பிறகு நாங்கள் சவாரிக்கு செல்லும் போது ஏதேனும் பெண் ஆட்டோ ஓட்டுநர்களை பார்த்தால் வண்டியை நிறுத்தி அவர்களிடம் பேசுவோம். அவர்கள் வருமானம், தேவை குறித்து கேட்டறிந்து இணைந்து செயல்படுவோம். இவ்வாறுதான் நாங்கள் 5-6 ஆண்டுகளாக ஒரு குழுவாக செயல்பட்டு வருகிறோம்.

ஸ்டாண்டில் ஆண்கள் எங்களை அனுமதிப்பதில்லை:

படித்த ஆட்டோ ஓட்டுநர்கள் 50 பேர் இந்த சங்கத்தில் உள்ளனர். இவர்களில் போலீஸ், ஆசிரியர், டபுல் டீகிரி முடித்தவர்கள் உள்ளனர். கார்பொரேட் கம்பனியில் கிடைக்கும் 30,000 வருவாயை. அவர்கள் இங்கு பெற முடியும். முக்கியமாக இங்கு இருக்கும் பெண்கள் குழந்தைகளை கவனித்து கொள்ளவதற்கும் நேரம் இருக்கும். இவ்வாறு இந்த பெண்களுக்கு குடும்பத்தை கவனித்து கொள்ளவும், குழந்தைகளை பள்ளி, கல்லுரிக்கு போய் விடவும், வருவாய் ஈட்டவும் 3 இன் 1ஆக இந்த வேலை இருப்பதால். படித்தவர்களும் இங்கு ஆட்டோ ஓட்டுகின்றனர்.

இதையும் படிங்க: யானைகளை காக்கும் ஏ.ஐ. கேமராக்கள்... தமிழக வனத்துறையின் புதிய முயற்சியால் ரயில் விபத்தில் விலங்குகள் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி!

லோன் கிடைத்து வண்டி வாங்கி வெளியில் சவாரிக்கு வருவதே சவால் தான். இதில் நாங்கள் எதாவது ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் சென்றால் ஆண்கள் பெண்களுக்கு இடமில்லை. எங்கள் ஸ்டாண்ட் இது என கூறுவார்கள். ஸ்டாண்டில் நாங்கள் சேர என்ன வழி? என கேட்டால். இல்லை பெண்கள் சேர முடியாது என கூறுவார்கள். ஒரு சிலர் அதிக பணம் செலுத்த சொல்வார்கள். 5,000 முதல் 10,000 வரை, 1,00,000 வரை கேட்பார்கள், ஒரு சிலர் கேட்பார்கள்.

மோகன சுந்தரி பேட்டி (ETV Bharat Tamil Nadu)

அரசு இதை செய்தால் உதவியாக இருக்கும்!

அதனால் தற்போது வரை எங்களுக்கு ஸ்டாண்ட் என்று ஒன்று இல்லை. ஆண்களை பொறுத்தவரை ஓய்வு எடுக்கும் இடமாக ஸ்டாண்ட் உள்ளது. எங்களுக்கு பெண் ஓட்டுநர்களுக்கு பல தேவைகள் உள்ளது. காலையிருந்து வண்டி ஓட்டுவோம், கழிவறைக்கு கூட இடம் இல்லை, சாப்பாடிவதற்கென ஒரு இடமில்லை. சுற்றி இருப்பவர்கள் அலட்சியமாக எங்களை பார்ப்பார்கள். எங்களுக்கென ஒரு ’பிக் அப் பாய்ட்ண்’ போன்று அரசு அமைத்து தந்தால் நன்றாக இருக்கும். பெண்களுக்கான ஆட்டோ சேவை செயலி ஒன்றை விரைவில் செயல்பாடுக்கு கொண்டு வர உள்ளோம்” என்றார்.

தமிழ்நாடு அரசு ஆட்டோ ஓட்டுநர்களை மதித்து, சில திட்டங்கள் கொண்டு வரலாம். கடன் உதவி கிடைப்பது கடினமாக உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கலாம். இனி பெண்களுக்கு ஆட்டோ ஓட்டும் தொழில் நிரந்திர தொழிலாக அமையும் வகையில் திட்டங்கள் அமைத்தால் உதவிகரமாக இருக்கும் என்ற எண்ணத்தை விதைத்திருக்கிறார் மோகன சுந்தரி.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.