ETV Bharat / state

"வேறு கூட்டணி என்ற சிந்தனையும் இல்லை.. தேவையும் இல்லை" - திருமாவளவன் பளிச் பதில்! - THIRUMAVALAVAN

திமுக கூட்டணியைத் தவிர்த்து எங்களுக்கு வேறு கூட்டணி என்கிற சிந்தனையும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்
திருமாவளவன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2024, 11:11 AM IST

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே கூட்டணியை சிதறடித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் விசிகவை ஒரு துறுப்புச்சீட்டாக பாஜக பயன்படுத்துவதாகவும், அதற்கு ஒருபோதும் இடம் தர மாட்டோம் எனவும், எங்களுக்கு வேறு கூட்டணி என்கிற சிந்தனையும் இல்லை, தேவையும் இல்லை என திருமாவளவன் தெரிவித்தார்.

மதுரையிலிருந்து விமான மூலம் சென்னை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில், நான் கலந்து கொள்ளவில்லை என உறுதி செய்யப்பட்டதும் நீங்கள் கலந்து கொள்ளவில்லை நான் கலந்து கொள்ளலாமா? என என்னிடம் கேட்டார் அதற்கு அனுமதி கொடுத்தது நான்தான். நீங்கள் கலந்து கொள்ளுங்கள். ஆனால் கவனமாகப் பேசுங்கள் எனக் கூறியிருந்தேன்.

என் அனுமதியோடுதான் பேசினார்:

என்னுடைய அனுமதி இல்லாமல் போகவில்லை. அவரை போக வேண்டாம் எனக் கூறுவது ஜனநாயகம் இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எளிய மக்களை ஒரு அமைப்பாக மாற்றி இருக்கிற கட்சி, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அணுகுமுறை உண்டு, பின்னணி உண்டு. மற்ற கட்சிகளைப் போல விசிகவும் முடிவெடுக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். விசிக தொடக்கத்தில், ஒரு 'தலித் கட்சி' என்கிற அடையாளத்தோடு பொதுப்பணிகளில் ஈடுபட்டது.

விசிக திருமாவளவன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

அரசியல் கட்சிகளில் ஈடுபட நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளில், ஒன்று இந்த இயக்கத்தில் தலித் அல்லாத ஜனநாயக சக்திகள் வந்து சேரலாம், சிறுபான்மையினர் உட்பட அனைவருக்கும் இந்த கட்சியின் பொறுப்புகளில் அங்கம் வகிக்க இடம் உண்டு என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றினோம். அதை வேளச்சேரி தீர்மானம் என்று அழைக்கிறோம்.

ஆலோசித்து நடவடிக்கை:

துணை பொதுச்செயலாளர் பொறுப்பு 10 நபர்களுக்கும் அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு 10 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதில் தலித் அல்லாதவர்களும் உண்டு. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் தலைவர், பொதுச்செயலாளர்கள் உட்பட நபர்கள் கலந்து ஒரு முறைக்கு இருமுறை கலந்து ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுப்போம்.

ஏனென்றால் தலித் அல்லாதவர்கள் கட்சியில் வரும்போது அவர்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டு விடக்கூடாது. எனவே துணை பொதுச்செயலாளர் மற்றும் தலித் அல்லாதவர் பொறுப்புகளில் இருக்கும்போது அவர்கள் தவறு செய்தால் தலைவர் பொதுச்செயலாளர் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்துத் தான் எந்த நடவடிக்கையும் எடுப்போம். அது எங்கள் கட்சியின் நடைமுறை.

திமுக, அதிமுக, பாஜக போல் நாங்கள் செயல்பட வேண்டுமென எதிர்பார்ப்பது ஏற்புடையதல்ல. ஆதவ் அர்ஜுனா தற்போது கட்சியில் பொறுப்பில் உள்ளார். எங்களுடன் தொடர்பில் உள்ளார். அம்பேத்கரின் பேத்தியின் கணவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு இருப்பதால்தான் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரின் சகோதரர் ஒருவர் தலைமறைவாக இருப்பதால் சந்தேகத்தின் பெயரில் என்ஐஏ அதிகாரிகள் இவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

இவர் உயர் பொறுப்புகளில் பணியாற்றியவர். இடதுசாரி சிந்தனையாளர் அவரை மகாராஷ்டிரா மாநிலத்தில் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சிறப்பு விருதுநகராக அழைக்கின்றனர். அவர் நீதிமன்றம் அனுமதியோடுதான் தமிழ்நாடு வந்தார். அவரை தீவிரவாத முத்திரை அந்நியப்படுத்துவது பாஜகவின் அநாகரீகமான அரசியல். பாஜக இதுபோன்ற அரசியலை வடக்கே வைத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது.

இதையும் படிங்க: "குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் மைக் பிடித்து பேச்சு" - அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கு!

வேறு கூட்டணி குறித்த சிந்தனை இல்லை:

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு திருமாவளவனோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியோ குறி அல்ல. திமுகவும் திமுக தலைமையிலான கூட்டணி தான் அவர்களுக்கு டார்கெட். தொடர்ந்து மூன்று பொதுத்தேர்தலில் கட்டுக்கோப்போடு இருந்து திமுக தலைமையிலான கூட்டணி மக்கள் செல்வாக்குடன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத இவர்கள் தேர்தலுக்கு முன்னரே கூட்டணியை சிதறடித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் விசிகவை ஒரு துறுப்புச்சீட்டாக பயன்படுத்துகிறார்கள். அதற்கு ஒருபோதும் நாங்கள் இடம் தர மாட்டோம் என்றார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், எங்களுக்கு வேறு அணி என்கிற சிந்தையும் இல்லை, தேவையும் இல்லை" என உறுதியாகத் தெரிவித்தார்.

சென்னை நடந்த அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூலான ICONOCLAST “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தலைவர் விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் கட்சி நலனுக்கு எதிராக உள்ளதாகவும், அவரது விவகாரத்தில் விரைவில் முடுவு எடுக்கப்படும் எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.