ETV Bharat / state

"துணை முதலமைச்சர் குறித்த கேள்வி" - திருமாவளவன் பதில் என்ன? - thirumavalavan about DPCM

துணை முதலமைச்சரை ஆளுங்கட்சி முடிவு செய்யும் எனவும், அதற்கு முன் கருத்து சொல்ல முடியாது. அது அவர்களுக்கான சுதந்திரம் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்
திருமாவளவன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2024, 4:24 PM IST

கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், துணை முதலமைச்சரை முடிவு செய்வதற்கான கூட்டம் நடந்தது குறித்தான கேள்விக்கு, "அது ஆளுங்கட்சி முடிவு. அதற்கு முன் கருத்து சொல்ல முடியாது. அது அவர்களுக்கான சுதந்திரம். அதிகாரத்தில் யாரை அமர வைக்க வேண்டும் என்பது அவர்களின் முடிவு.

திருமாவளவன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தேசிய கல்வி கொள்கை வேறு, தேசிய மது விலக்கு கொள்கை வேறு, தேசிய கல்வி கொள்கையில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கு கருத்து முரண்பாடு கொண்டு நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் உள்ளது. விசிக பொறுத்தவரை அப்படியே ஏற்று கொள்வதில் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக கருதுகிறோம். அதனால் எதிர்க்கிறோம்.

இதையும் படிங்க : சமூக நீதிப் பார்வையோடு விஜய் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார் - திருமாவளவன் மகிழ்ச்சி! - tvk vijay

குஜராத், மிசோரம், பீகார், நாகலாந்து தவிர அனைத்து மாநிலங்களிலும் அரசுகளே மதுபான விற்பனை செய்து வருவதால் தேசத்திற்கான மனித வளம் பாழாகிறது. அதனால் அரசியலமைப்பு சட்டம் 47ன்படி தேசிய அளவிலான மது விலக்கு கொள்கையை வரையறுக்க வேண்டும். அதற்கான தனி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

தமிழக அரசு மதுக்கடைகளை மூடுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் இந்தியா முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும். தேசிய மது விலக்கு கொள்கை வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

முன்னாள் ஆளுநர் தமிழிசை கருத்து தொடர்பான கேள்விக்கு, அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறாததால் விரக்தியில் பேசுகின்றனர். பாஜக ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா கருத்துக்கு, முதலமைச்சரை சந்திப்பதற்கு முன் சொன்ன கோரிக்கைகள் தான் சந்தித்த பிறகும் பேசி வருகிறோம். எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. திமுகவை உட்கார வைத்து மாநாட்டில் எப்படி மது ஒழிப்பை பேசுவீர்கள்? நாங்கள் பேசுகிறோமோ, இல்லையா என்பதை மாநாட்டின் போது பாருங்கள் என்றார்.

மேலும், அன்னபூர்ணா உரிமையாளர் பேசிய கருத்து குறித்த கேள்விக்கு, மிகவும் சரியானது, ஏற்புடையது, வரவேற்கிறேன், அவர் பேசிய கருத்து தான் சராசரி குடிமகனின் கருத்தாகும். அவரை அழைத்து கொண்டு அவரை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டது வேதனை அளிப்பது விசிக அதனை வன்மையாக கண்டிக்கிறது" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.