சென்னை: 288 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மகாராஷ்டிரா தேர்தலில் 145 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சிக் கட்டிலில் அமரும்.
மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியான பாஜக, சிவசேனா ( ஏக்நாத் ஷிண்டே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் ( அஜித் பவர் பிரிவு) ஆகியோர் இணைந்து மகாயுதி கூட்டணி (Mahayuti alliance) உருவாகியுள்ளனர். மேலும் இந்த கட்சிகள் இடையே கூட்டணி தொகுதி பங்கீட்டில் பேச்சு வார்த்தை முடிந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அமைச்சரவை அல்லது சட்டமன்றம் நிறைவேற்றும் தீர்மானங்கள் மத்திய அரசை கட்டுப்படுத்தாதது ஏன்?
ஆனால் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகியோர் அடங்கிய மகா விகாஸ் (maha vikas aghadi) கூட்டணியில், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற பொது தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளிலும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி 10 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும் ஏனைய மற்றத் தொகுதிகளில் இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் | ராஷ்ட்ரிய ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகள் |
1.கங்காபூர் | பிவாண்டி |
2.பத்நாபூர் | மலேகோன் |
3.நன்டெட் (தெற்கு) | வாசிம் |
4.ஹிங்கோலி | அவுரங்காபாத் (மேற்கு) |
5.கல்மனுரி | அவுரங்காபாத் (கிழக்கு) |
6.வாஸ்மாட் | புலம்பிரி |
7.தெக்லூர் | மும்பை மலாட் |
8.அவுரங்காபாத் (மையம்) | தாராவி |
9.முள்ளன்ட் ( மும்பை) | போக்கர்டன் ஜல்னா |
10.கன்னட் | துலே |