வேலூர்: சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர், கோயம்புத்தூர் மற்றும் விஜயவாடா ஆகிய முக்கிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.
இந்நிலையில் இன்று ( ஆகஸ்ட் 6) ரயிலில் பயணம் செய்தபடி அதிகாரிகள் தண்டவாளத்தின் உறுதித் தன்மை மற்றும் எந்தெந்த இடத்தில் தண்டவாளத்தில் வளைவுகள் உள்ளது. ஏதேனும் இடத்தில் வளைவாக உள்ள தண்டவாளத்தை நேராக வேண்டி உள்ளதா மற்றும் சிக்னல்கள் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்ததாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனை ஓட்டத்தின்போது, சென்னையில் காலை 10:30 மணிக்கு புறப்பட்ட ரயில் பகல் 12:30 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தை அடைந்தது.
சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ள சென்னை - காட்பாடி வந்தே பாரத் மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் பணிகள் ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெற்றதை தொடர்ந்து, இந்த சோதனை ஓட்டமானது காட்பாடி ரயில் நிலையத்தை நோக்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சோதனை ஓட்டத்தில் ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பு உயரதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு ஆணையர், ஐசிஎஃப் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயிலில் வெடித்த செல்போன்.. வாணியம்பாடி அருகே நடந்தது என்ன?