ETV Bharat / state

உதயநிதி ஸ்டாலின்: மிதிக்கட்டும்; அப்படியாவது அழுக்கேறிய மூளை சுத்தமாகட்டும்!

ஆந்திராவில் தன் புகைப்படத்தை மிதிப்பது போன்று பரவிவரும் ஒரு காணொளியை தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டு, அதற்கான பதிலையும் பதிவாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

udhayanidhi stalin responds to controversy and crticizes opponents for defaming his image news thumbnail
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பதிவு. (X / @Udhaystalin)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2024, 8:06 PM IST

சென்னை: சனாதன தர்மம் தொடர்பான தனது கருத்துகள் மற்றும் திருப்பதி லட்டு பிரச்சினையை மையமாகக் கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு ஆந்திராவில் சில அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதற்காக அவர் மீது கடுமையான விமர்சனங்களும் வெளிப்பட்டன.

குறிப்பாக, சமூக வலைத்தளங்களில், உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை சிலர் மிதிப்பது போன்ற வீடியோக்கள் மற்றும் படங்கள் வைரலாகப் பரவி வருகின்றன. இது திமுக (DMK) தொண்டர்களிடையே பெரும் எதிர்ப்பை தூண்டியுள்ளது.

இந்த சம்பவத்தைக் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் மிகவும் எளிமையாக, ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தும் தனது கருத்துக்களை பகிர்ந்தார். அவர் வெளியிட்ட பதிவில், திராவிடர் இயக்கத்தின் முன்னோடி தலைவர்களின் தலையாய சிந்தனைகளையும், அரசியல் களத்தில் அவர்கள் எதிர்கொண்ட ஆபத்துகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் எக்ஸ் (X) பதிவு:

உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில், தன் புகைப்படத்தை மிதித்து அவமதிக்கின்றனர் என்று நினைக்கும் அந்த கூட்டங்களுக்கு "அரசியல் முதிர்ச்சி" இல்லாதது தெளிவாகத் தெரிகிறது என்று தனது கருத்தைத் தைரியமாக வெளிப்படுத்தியுள்ளார். அவர் தன் பதிவில், "அவர்களின் இச்செயல் என்னைத் துன்பப்படுத்தவில்லை, மாறாக, நான் திராவிடக் கொள்கையை மிகவும் சரியாகப் பின்பற்றி வருகிறேன் என்பதற்கான சான்றாகவே இதைப் பார்க்கிறேன்."

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரும் ஒரே மாதிரியான எதிர்ப்புகளைச் சந்தித்தனர் என்று நினைவூட்டினார். பெரியார் மீது செருப்புகளை வீசினார்கள், அம்பேத்கரை பல முறை அவமதித்தனர், அண்ணாவை வசைபாடினர், கலைஞரை கடுமையாக விமர்சித்தனர். அதேபோல், இன்றும் என்னையும் எதிர்த்துப் பேசுபவர்கள் இருக்கிறார்கள் என்றார்.

ஆனால் இது ஒரு வகையில் திராவிடக் கொள்கை பரவுவதற்கு மற்றும் அதன் தாக்கத்தை உணர்த்துவதற்கான அடையாளமாகவே உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள்:

அவர் தனது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும், இவ்வாறான நிகழ்வுகளால் கோபமுறவேண்டாம் என்று அறிவுறுத்தினார். அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல், திராவிடக் கொள்கையில் இருந்து திசை மாறாமல், பகுத்தறிவு மற்றும் சமத்துவ பாதையில் தொடர்ந்து செயலாற்றவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

"என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்," என்றார்.

இதையும் படிங்க
  1. “Let's wait and see”.. பவன் கல்யாண் பேச்சுக்கு உதயநிதி பதில்!
  2. சனாதன விவகாரம்; ஆந்திர துணை முதல்வர் மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார்!
  3. 2026 சட்டமன்ற தேர்தல்: உதயநிதி VS விஜய்?- இளைஞர் பட்டாளம் யார் பக்கம்?

நிகழ்வுகளின் பின்னணி:

சனாதன தர்மத்தின் தாக்கம் குறிதது, அதன் சமூக அரசியல் விளைவுகள் குறித்துச் சில நாள்களுக்கு முன் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இதனால் அவர்மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாகவும் அவர் கருத்து கூறியதால், இது ஆந்திர மாநிலத்தில் பலரின் கோபத்தைத் தூண்டியது.

இதனை எதிர்த்து உதயநிதி தனது கருத்தை தைரியமாகவும் உறுதியான முறையிலும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அவரது பதிவின் வாயிலாக, அவர்தம் திராவிடர் கொள்கையை எதிர்ப்பவர்களிடம் இருந்து எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும், அதனை தைரியமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது.

etv bharat tamil nadu whatsapp channel link
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.