நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள கேத்தி அரக்காடு பகுதியில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஜோசப் ராய், அவரது மனைவி மற்றும் தன்வி (3), மன்வி (2) ஆகிய இரு குழந்தைகளுடன் ஒரு வருடமாக ஊட்டி கவர்னர் சோலை பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் மற்றும் இவரது மனைவி சேர்ந்து கேத்தி அரக்காடு பகுதியில் உள்ள காளான் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று ஜோசப் ராய் மற்றும் அவரது மனைவி காளான் கம்பெனியில் பணியில் இருந்த போது, அவரது இரண்டு குழந்தைகளும் மாலை 4 மணியளவில் காளான் பண்ணைக்கு அருகில் உள்ள இடத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, மகள் மின்வி குட்டை தண்ணீரில் விழுந்துள்ளார். அதனைப் பார்த்த மற்றொரு குழந்தை தன்வி அழுது கொண்டிருக்கும் சத்தம் கேட்டதால், பெற்றோர் மற்றும் அங்கு பணியாற்றியவர்கள் வெளியில் வந்து பார்த்துள்ளனர். அப்போது மன்வி தண்ணீரில் மிதந்தவாறு கிடந்துள்ளார்.
இதையும் படிங்க: குழந்தையில்லாத தம்பதியிடம் பாச உரையாடல்.. பணத்துக்காக கொலை செய்த 5 பேர் கைது!
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அங்கு பணியாற்றியவர்கள், உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தையின் மரணம் குறித்து கேத்தி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்