ETV Bharat / state

2 வயது குழந்தையை கடித்துக் குதறிய தெருநாய்.. சென்னையில் தொடரும் நாய் கடி சம்பவங்கள்! - Chennai child street dog attack

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 12:58 PM IST

Dog Attack on Girl: வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தையை, தெரு நாய் கடித்து படுகாயமுற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அக்குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார்.

தெரு நாய்கள், தாயுடன் காயமடைந்த சிறுமி
தெரு நாய்கள், தாயுடன் காயமடைந்த சிறுமி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை அம்பத்தூர் ஏழாவது மண்டலத்துக்கு உட்பட்ட அண்ணாநகர் ஜீவன் பீமா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருபவர்கள் தங்கபாண்டி, பிரதீபா தம்பதி. தங்கபாண்டி அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை மாலை 4.30 மணி அளவில் தங்கபாண்டியின் இரண்டரை வயது மகள் யாஷிகா, வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த பொழுது, எதிர்பாராத விதமாக சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த தெரு நாய் ஒன்று குழந்தையின் மீது சீறிப்பாய்ந்து, யாஷிகாவின் கன்னத்தில் கடித்து குதறியது. வலி தாங்காமல் அலறி துடித்த யாஷிகாவின் சத்தம் கேட்டு, அதிர்ச்சியடைந்து ஓடி வந்த அவருடைய தாய் பிரதீபா, நாயிடம் சுமார் 20 நிமிடம் போராடி குழந்தையை மீட்டார்.

அதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்த யாஷிகாவை, அக்கம் பக்கத்தினரின் உதவியோடு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு குழந்தையின் கன்னத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்க உள்ளதால், அதற்கு முன்னதாகவே சாலையில் சுற்றி திரியக்கூடிய தெரு நாய்களை பிடித்து, பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தையை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாகவே சென்னையில் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வளர்ப்பு நாய்கள் மற்றும் தெரு நாய்களால் குழந்தைகள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்ப அச்சமடைந்துள்ளனர்.

கடந்த 5ஆம் தேதி, பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தையை இரு ராட்வீலர் நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நிலத்தகராறில் கூலி ஆட்களை ஏவி குடும்பத்திற்கு மிரட்டல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்! - Ex Servicemen Threatened In Vellore

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.