ETV Bharat / state

மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக 2 கோடி மோசடி.. சென்னையில் இரு பெண்கள் கைது..! - fake central government job

Two arrested for job fraud in chennai: மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டு 2 கோடி வரை வசூலித்ததாக சென்னையை சேர்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இரண்டு பெண்கள்
கைதான இரண்டு பெண்கள் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 28, 2024, 12:01 PM IST

சென்னை: சென்னை மேற்கு அண்ணாசாலை பகுதியில் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் நடத்தி வருபவர் இந்திரா காந்தி (54). அந்த பயிற்சி மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கவிப்பிரியா (26). இவர்கள் மத்திய அரசு பணியில் சேர்த்து விடுவதாக கூறி பலரிடம் பணம் வசூல் செய்துள்ளனர்.

அதில், கோவையை சேர்ந்தவர்களிடமும் பணம் வசூலித்துள்ளனர். 18 பேரிடம் 2 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. பணத்தை கொடுத்த நிலையில் வேலை வாங்கி கொடுக்காமல் இருந்துள்ளனர். இதுகுறித்து கேட்டால் முறையான விளக்கம் அளிக்காமல் இருந்துள்ளனர். பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த மோசடி குறித்து கோவையை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர மத்திய குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சென்னை சென்று இந்திராகாந்தியையும், கவிப்பிரியாவையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த மோசடியில் சிவமலர் (35) என்பவரும் இந்திரா காந்தியின் மகள் ரஞ்சனி (29) ஆகியோரும் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். ரஞ்சனி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று டெல்லியில் மத்திய அரசு பணியில் இருப்பதாகவும், இவர் தான் மத்திய அரசுக்கான பணியில் சேர்த்துவிட உதவுகிறார் என்றும் பணம் கொடுத்தவர்களிடம் கூறி உள்ளனர்.

கைதான கவிப்பிரியா சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வருவதாக பலரிடமும் கூறி உள்ளார். இந்த மோசடி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தங்கப் புதையல் கிடைத்ததாக கைவரிசை! போலி நகைகளை விற்ற மோசடி கும்பல் கைது.. சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.