ETV Bharat / state

கூடலூர் அருகே 2 புலிகள் உயிரிழப்பு; காட்டுப்பன்றி காரணமா? விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்! - 2 tigers died in nilgiris - 2 TIGERS DIED IN NILGIRIS

2 Tigers died in Nilgiris: கூடலூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் 2 புலிகள் உயிரிழந்த விவகாரத்தில், விஷத்தினால் புலிகள் இறந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உயிரிழந்த 2 புலிகள்
உயிரிழந்த 2 புலிகள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 10:15 PM IST

நீலகிரி: கூடலூர் அருகே தேயிலைத் தோட்டத்தில் இரண்டு புலிகள் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விஷத்தினால் புலிகள் இறந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர் அருகே, பிதிர்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட நிலா கோட்டை பகுதியில் தனியார் தோட்டத்தில் இரண்டு புலிகள் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், இரு புலிகளின் சடலங்களையும் மீட்டு, முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இரண்டு புலிகள் இறந்து கிடந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஒரு காட்டுப்பன்றி இறந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அங்கு சென்று பார்த்த நிலையில், இறந்த காட்டுப்பன்றி உடல் அருகில் புலிகளின் கால் தடங்கள் இருந்துள்ளது. இவை இறந்த இரு புலிகளின் கால் தடங்களா? என்று சோதனை செய்யப்பட்டது. இதில் இறந்த காட்டுப்பன்றி அருகில் இருந்த புலிகளின் கால் தடங்கள், இறந்த 2 புலிகளின் கால் தடங்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில், காட்டுப்பன்றியின் உடலை பெருமளவில் புலிகள் சாப்பிட்டுள்ளது தெரியவந்தது. புலிகளைப் பரிசோதனை செய்ததில் அவற்றின் வயிற்றில், அரிசி, மரவள்ளிக் கிழங்கு மற்றும் காட்டுப்பன்றியின் மாமிசம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில், விஷத்தினால் 2 புலிகள் இறந்திருக்கக்கூடும் என மருத்துவர்களால் அறியப்படுகிறது.

அதாவது, காட்டுப்பன்றி விஷம் கலந்த உணவினை சாப்பிட்டிருக்கும், அந்த காட்டுப்பன்றியை புலிகள் அடித்து சாப்பிட்டதால் அந்த 2 புலிகள் இறந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. இந்நிலையில், புலிகள் மற்றும் காட்டுபன்றியின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வகத்திற்கு அனுப்பி அறிக்கை பெறப்படும். இது குறித்து வன உயரின வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக அந்தப் பகுதிகளில், இரு சரகர்கள் தலைமையில் வனப்பணியாளர்களை குழுக்களாக பிரிக்கப்பட்டு விசாரணையும், தேடுதல் பணியும் நடந்து வருகிறது. மேலும், உதவி வனப்பாதுகாவலர், வனப்பாதுகாப்பு படையும் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையில், இறந்த 2 புலிகளின் உடலை வனத்துறையினர் தகனம் செய்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சோ ராமசாமி மனைவி சௌந்தரா காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.