திருவண்ணாமலையில் போதை பொருள் விவகாரத்தில் ரஷ்ய நாட்டை சேர்ந்த இருவரை கைது செய்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இருவரிடம் இருந்தும் 239 கிராம் அளவிலான டிஎம்டி, சைலோ, சைபின் ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அமனிடா மஸ்காரியா, அயாஹூஸ்கா, கம்போ (தவளை விஷம்) ஆகியவற்றை திருவண்ணாமலையில் நடக்கும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பயன்படுத்த முயன்றது இருவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறியுள்ளனர். திருவண்ணாமலையில் வரும் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடக்கும் கூட்டம் ஒன்றில் இந்த போதைப் பொருளை பயன்படுத்த திட்டமிட்டது தெரியவந்து உள்ளது.
இவர்கள் ரிஷிகேஷ், மணாலி உள்ளிட்ட பகுதிகளிலும் இதுபோன்ற அயாஹூஸ்கா செர்மனி நிகழ்ச்சிகளை நடத்தி இருப்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு! - DA 9 percent increase