திருநெல்வேலி : திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், இன்று (அக்.25) காலை மூன்றடைப்பு அருகே நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது காஞ்சிபுரத்தில் இருந்து காவல்கிணறு நோக்கி சென்று கொண்டிருந்த மினி லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், மினி லாரி முழுவதும் சேதமடைந்த நிலையில், இடிபாடுகளில் ஓட்டுநர் உட்பட இருவர் சிக்கி இருப்பதாக பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மினி லாரியை மீட்டு சிக்கியிருந்த இருவரை மீட்டனர். ஆனால் விபத்து ஏற்பட்ட நிலையிலேயே இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
நெல்லையில் தொடர் விபத்து.. 3 பேர் பலியான சோகம்! #tirunelveli #nellai #accident #death #etvbharattamil pic.twitter.com/Qii1yCldEP
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) October 25, 2024
பின்னர் இருவரின் உடல்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : வேலூர் அருகே ரயிலில் இருந்து கழன்ற இன்ஜின்!
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்தில் உயிரிழந்தது திருநெல்வேலி மாவட்டம், படளையார் குளம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி மகேஷ் (20) என்பதும், இவர் மினி லாரியை இயக்கி வந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும், அவருடன் பயணித்தவர் முதலைக்குளம் பகுதியைச் சேர்ந்த உசிலவேல் (36) என்பதும் தெரியவந்துள்ளது.
காவல்கிணறு பகுதியில் செயல்பட்டு வரும் விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (இஸ்ரோ) தேவையான பொருட்களை ஏற்றி வந்த மினி லாரியை இயக்கிய ஓட்டுநர் மாயாண்டி மகேஷ் தூக்கத்தில் வலது புறமாக ஏறியபோது எதிர்திசையில் வந்த அரசுப்பேருந்து மீது மோதிய விபத்துக்குள்ளானது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மூன்றடைப்பு போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்