ETV Bharat / state

குதிரையேற்ற பயிற்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்.. பயிற்சியாளர்கள் கைது! - Pocso Case

Pocso Case: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள்
கைது செய்யப்பட்ட நபர்கள் (Credit - Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 9:30 PM IST

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலடிக்குமூலை பைபாஸ் சாலையில் குதிரை ஓட்டும் பயிற்சி மையம் நடத்தி வருபவர் ராஜ்குமார் (வ்யது 41). இந்த பயிற்சி மையத்தில் நாட்டு சாலை பகுதியை சேர்ந்த தமிழரசன் வயது (வயது 26) பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இங்கு காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் பலரும் குதிரை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள மாணவி ஒருவருக்கு தமிழரசன் குதிரை ஏறும் பயிற்சியை கற்றுக் கொடுத்து வந்துள்ளார். பின்னர் அந்த மாணவியிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களையும் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவி, தனது தந்தையிடம் நடத்தவற்றை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை முதலில் குதிரை ஏற்ற பயிற்சி சொல்லிக் கொடுக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜ்குமாரிடம் சென்று நடத்தவற்றை கூறியுள்ளார்.

இதனை சற்றும் பொருட்படுத்தாத ராஜ்குமார் மற்றும் தமிழரசன் ஆகிய இருவரும், நடந்த நிகழ்வை வெளியில் கூறாமல் இருக்க வேண்டும் என்று தங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதனை வெளியில் சொல்லும் பட்சத்தில் தனது மகளின் எதிர்காலமும்,

தனது பெயரும் கெடும் என பயந்த மாணவியின் தந்தை ஒரு நிலைக்கு மேல் இருவரின் தொந்தரவு தாங்க முடியாமல் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் பாலியல் வன்புணர்வு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வனிதா, விசாரணைக்குப் பின் ராஜ்குமார், தமிழரசன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் படுகாயம்.. அச்சத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.