தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட கிழக்கு காவல் நிலையத்திற்குட்பட்ட சிவராயர் தோட்டம் பகுதியில் உள்ள பட்டு நூல்கார தெருவில், தஞ்சாவூர் தொடக்கப் பட்டு கூட்டுறவு சொசைட்டி உள்ளது. இதில், பிரகதீஸ்வரி (62) என்பவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 8.5 சவரன் தங்க நகையை கத்தியை காட்டி மிரட்டி பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து உடனடியாக அவர் தஞ்சை நகர கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பெயரில், உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையில், தனிப்படை அமைத்து காவல்துறையினர் சிசிடிவி கேமரா உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்தனர்.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையைச் சேர்ந்த பாலச்சந்தர் (35) மற்றும் செந்தில்குமார் (46) என்பது தெரியவந்தது. பின்னர், அவர்களை பிடிக்க சென்றபோது தப்ப முயன்று பாலச்சந்தர் என்பவருக்கு கால் முறிவும், செந்தில்குமார் என்பவருக்கு கையும் உடைந்தது.
இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் நடைபெற்ற 8 மணி நேரத்தில் நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : வேலூர்: வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக மாற்றி விற்பனை செய்த 5 பேர் கைது! - Five people arrested