ETV Bharat / state

'எங்களை வாழ விட மாட்டாங்க'.. திருமணத்தை தாண்டிய உறவால் ஜோடி தற்கொலை.. பகீர் பின்னணி - illegal affair couple

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 2:15 PM IST

Chennai Suicide: சென்னையில் திருமணத்தை மீறிய உறவில் பழகி வந்த இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாக்கம் காவல் நிலையம் புகைப்படம்
பெரும்பாக்கம் காவல் நிலையம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பெரும்பாக்கம் அருகே திருமணத்தை மீறிய உறவால் இருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் குறித்த பெரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்ஃபியோ மேரி (23). இவரது கணவர் சூரி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. அதேபோல், செம்மஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (30). இவர் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உமா, இவர்களுக்கும் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், செல்ஃபியா மேரி விஜயுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக இவர்களது உறவு குறித்து இரண்டு குடும்பத்தாருக்கும் தெரியவந்துள்ளது. இதனால், செல்ஃபியா மேரி தனது கணவர் சூரியை பிரிந்தும், விஜய் தனது மனைவி உமாவை பிரிந்து வந்ததுடன் செல்ஃபியோ மேரியும், விஜயும் தனியாக வீடு வாடகை எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கு இருவீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு செல்ஃபியா மேரி தனது தோழிக்கு “எங்கள் குடும்பத்தினர் எங்களை வாழ விட மாட்டார்கள். அதனால், நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கிறோம்” என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தோழி இது குறித்து பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

தற்கொலை தடுப்பு உதவி மையம்
தற்கொலை தடுப்பு உதவி மையம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரும்பாக்கம் போலீசார், செல்ஃபியா மேரி - விஜய் தங்கியிருந்த வீட்டில் சென்று பார்த்த நிலையில், இருவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். இதனையடுத்து போலீசார் இருவர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தம்பியுடன் பழக்கம்.. காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்.. எண்ணூரில் பகீர் சம்பவம்! - Husband Kills Wife

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.