அரியலூர்: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பழகனின் மகன் அபிமணி (22) என்பவர் 12 வயது பள்ளி சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி தான் படித்த தனியார்ப் பள்ளியில் பணிபுரிந்து வரும் உடற்கல்வி ஆசிரியர் ஹெரால்டு சகாயராஜ்(52) என்பவரிடம் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்போது, உடற்கல்வி ஆசிரியர் இதனை விசாரிப்பது போல தன்னுடைய வீட்டிற்குச் சிறுமியை வரவழைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சோர்வாகக் காணப்பட்ட சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்துள்ளனர். அப்போது, சிறுமி பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர்.
இது குறித்து தலைமை ஆசிரியர் விசாரிக்கத் தாமதப்படுத்தியதால், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பு எண் 1098ஐ தொடர்பு கொண்டு பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் வந்து விசாரணை செய்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அபிமணி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஹெரால்டு சகாயராஜ் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தேனி அருகே காதல் கணவன் தலைமறைவு! மன உளைச்சலில் புதுப்பெண் தற்கொலை! - Newly Married Girl Suicide