ETV Bharat / state

ஏற்காடு மலையில் சூட்கேஸில் கிடந்த பெண் சடலம்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்.. இருவர் சிக்கியது எப்படி? - yercaud women murder - YERCAUD WOMEN MURDER

yercaud women murder: சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட பெண் வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

YERCAUD MURDER
YERCAUD MURDER
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 2:55 PM IST

சேலம்: ஏற்காடு மலைப் பாதையில் 40 அடி பாலம் அருகே கடந்த 20ம் தேதி ஒரு சூட்கேஸில் அழுகிய நிலையில் இளம்பெண் பிணம் கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த ஏற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து துப்பு துலங்கிய போலீசார், இளம் பெண் சடலத்தை அடைத்து வீசப்பட்ட சூட்கேஸ் புதியதாக இருந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் கோவையில் உள்ள ஒரு கடையில் அந்த சூட்கேஸ் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இருவர் கைது: இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கோவையில் சூட்கேஸ் வாங்கியது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பரவக்கோட்டை பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவர் வாங்கி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து நடராஜ் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பெண்ணை கோவையில் கொலை செய்து உடலை சூட்கேஸில் அடைத்து ஏற்காடு மலைப்பாதையில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

மேலும் சூட்கேஸில் பிணமாக கிடந்தது தனது காதலி என்றும், அவர் தேனி மாவட்டம் முத்தலாபுரத்தை சேர்ந்த சுபலட்சுமி என்றும் தெரிவித்தார். இதற்கு தனது உறவினர் கனிவளவன் என்பவர் உதவியதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஏற்காடு போலீசார் நேற்று முன்தினம் கனிவளவன் கைது செய்தனர்.

இதனிடையே கைதான நடராஜ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் .அதில் "எனக்கு திருமணம் ஆகி 5 மற்றும் 2 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கத்தார் நாட்டிற்கு வேலைக்கு சென்றேன். அங்குள்ள ஒரு நிறுவனத்தில் நான் வேலை பார்த்தேன். அதே நிறுவனத்தில் என்னுடன் வேலை பார்த்து வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த சுபலட்சுமியின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அப்பொழுது அவர் தனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் என்னிடம் கூறினார். அதற்கு நானும் எனக்கு திருமணம் ஆன விவரத்தை மறைத்து சுபலட்சுமி திருமணம் செய்து கொள்வதாக கூறினேன்.

வெளிநாட்டிலிருந்ததால் எங்களுக்கு இடையே யாரும் இடையூறாக இல்லாத நிலை இருந்தது. நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்தோம். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து இந்தியா திரும்பினோம். சொந்த ஊருக்கு சென்ற சுபலட்சுமி தனது குடும்பத்தினரிடம் சில நாட்கள் வசித்து விட்டு மீண்டும் வெளிநாடு செல்வதாக கூறிவிட்டு கோவைக்கு வந்தார். நானும் அங்கு சென்று பீளமேட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம்.

தகராறு எப்படி?: ஏற்கனவே மனைவியின் பெயரை நெஞ்சில் பச்சை குத்தி இருந்தேன் இதைப் பார்த்து சுபலட்சுமி தனது பெயரையும் பச்சை குத்துமாறு கேட்டுக் கொண்டதால் அவரது பெயரையும் நான் கையில் பச்சை குத்தினேன். இந்த நிலையில் சமீபத்தில் நான் சொந்த ஊருக்கு சென்றபோது கையில் சுபலட்சுமி பெயரைப் பச்சை குத்தியதை எனது மனைவி பார்த்துவிட்டு அவள் யார் என்று கேட்டால் தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து காதலியின் பெயரை அழித்துவிட்டேன்.

அதன் பிறகு கடந்த மாதம் 27ஆம் தேதி கோவைக்கு சென்றபோது கையில் குத்திய பெயர் ஏன் அழித்தீர்கள்? எனக் கேட்டு சுபலட்சுமி என்னிடம் தகராறு செய்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நான் இரும்பு கம்பியால் அவரது தலையில் ஓங்கி அடித்தேன். இதில் மயங்கி விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இதனால் அவரது உடலை மறைக்க முடிவு செய்து எனது உறவினர் கனிவளனிடம் தகவல் தெரிவித்தேன். பிறகு கோவையில் உள்ள ஒரு கடைக்கு சென்று பெரிய சூட்கேஸ் வாங்கி வந்து அதற்குள் சுபலட்சுமி உடலை அடைத்து வைத்தோம்.பின்னர் கடந்த ஒன்றாம் தேதி ஏற்காடு மலை பாதையில் 40 அடி பாலம் அருகே சூட்கேஸை வீசி விட்டு அதே காரில் கோவைக்கு சென்று விட்டோம்" என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:ஹோலி சிறப்பு பூஜையில் கோரம்.. உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோயில் தீ விபத்தில் 14 பேர் படுகாயம்! - Ujjain Mahakal temple fire

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.