ETV Bharat / state

தேனியில் மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. திடுக்கிட வைத்த கொலையாளியின் வாக்குமூலம்! - theni old woman murder

தேனியில் மூதாட்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த கொலையாளி போலீசிடம் அளித்த வாக்குமூலம் திடுக்கிட வைத்துள்ளது.

கொலையாளி அருண்
கொலையாளி அருண் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2024, 7:39 PM IST

தேனி: கண்டமனூர் அருகே உள்ள மரிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி என்பவரது மனைவி பவுனுத்தாய் (58). கணவர் இறந்து விட்ட நிலையில் பவுனுத்தாய் மட்டும் மரிக்குண்டு கிராமத்தில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 12-ந் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் ரத்த காயங்களுடன் பவுனுத்தாய் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் கண்டமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். கொலை செய்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் தேனி அருகே உள்ள பழனித்தேவன்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் மகன் அருண் (25) என்பவர், பவுனுத்தாயை கொலை செய்ததாக கூறி மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அவரை கண்டமனூர் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.அருண் போலீசில் அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது: நான் தேனியில் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறேன். பவுனுத்தாய் எனக்கு அத்தை முறை சொந்தம். இதனால் நான் அடிக்கடி அவரிடம் செலவுக்கு பணம் வாங்கி மீண்டும் அதனை கொடுத்து வந்தேன்.

இதையும் படிங்க: மது அருந்தியதை பார்த்ததால் ஊழியர் மீது தாக்குதல்? நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு!

இந்நிலையில், எனது வியாபாரம் எதிர்பார்த்தபடி செல்லாமல் நஷ்டமடைந்தது. இதனால் மீண்டும் வியாபாரத்தை தொடங்க பணம் தேவைப்பட்டது. இதற்காக ரூ. 2 லட்சம் பணம் தருமாறு பவுனுத்தாயிடம் கேட்டேன். ஆனால், அவர் தன்னிடம் பணம் இல்லை என்றும், நகை மட்டுமே உள்ளது என்றும் அந்த நகையை உனது பெற்றோர் உறுதியளித்தால் தருவதாக கூறினார்.

இதனைத் தொடர்ந்து எனது பெற்றோரிடம் அனுமதி வாங்கித் தருவதாக அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றேன். அப்போது அவர் கையில் 12 பவுன் நகை வைத்திருந்தார். நான் வேறு வழியில் செல்வதை அறிந்ததும் எதற்காக மாற்றுப்பாதையில் செல்கிறாய்? என என்னிடம் பவுனுத்தாய் கேட்டார். அதற்கு இந்த வழியாக சென்றால் சீக்கிரமாக வீட்டுக்கு செல்லலாம் என கூறினேன்.

ஆனால், அவர் அதை கேட்காமல் எனது மோட்டார் சைக்கிளில் இருந்து கிழே குதித்தார். இதனையடுத்து அவரை ஓங்கி அடித்தேன். இதில் மயக்கமடைந்து விழவே அவர் வைத்திருந்த நகையை எடுத்துக் கொண்டு கை, கால்களை கட்டி கிணற்றில் தூக்கிப் போட்டேன். பின்னர் அவர் இறந்து விட்டதை உறுதி செய்து அங்கிருந்து சென்று விட்டேன். போலீசார் தேடுவதை அறிந்ததும் எப்படியும் அவர்களிடம் சிக்கி விடுவேன் என பயந்து கோர்ட்டில் சரணடைந்தேன் என இவ்வாறு அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.