சென்னை: உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் சினிமாவில் இருந்து அரசியல் சென்ற பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (75) உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 10.12 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானதாகவும், அவரை எவ்வளவோ முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை எனவும் மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியானது.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நாளை இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஜய், சரத்குமார், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர்.
விஜய் இரங்கல்:
மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு.…
— TVK Vijay (@tvkvijayhq) December 14, 2024
நடிகரும், தவெக தலைவருமான விஜய் அவரது சமூக வலைத்தளத்தில், "மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
சரத்குமார் இரங்கல்:
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எனது நண்பருமான திரு.ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மறைந்த செய்தி வேதனையளிக்கிறது.
— R Sarath Kumar (@realsarathkumar) December 14, 2024
முதிர்ந்த அரசியல் அனுபவம் கொண்ட அவரை… pic.twitter.com/jLo514iulL
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் அவரது சமூக வலைத்தளத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எனது நண்பருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மறைந்த செய்தி வேதனையளிக்கிறது. முதிர்ந்த அரசியல் அனுபவம் கொண்ட அவரை பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
குஷ்பு இரங்கல்:
Extremely saddened to know that Shri @EVKSElangovan Sir , former Congress Union Minister, former TNPCC State President is no more. Had the opportunity to work under his guidance and leadership when in Congress. A man with wit and courage. A rare breed of an absolute non egoistic… pic.twitter.com/nIt5QL0V0c
— KhushbuSundar (@khushsundar) December 14, 2024
நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில், ஈவிகேஎஸ் இளங்கோவன் இறந்த செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் TNPCC மாநிலத் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இப்போது இல்லை. காங்கிரசில் இருந்தபோது அவரது வழிகாட்டுதலிலும், தலைமையிலும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அவர் புத்திசாலித்தனமும், தைரியமும் கொண்ட மனிதர். உள்ளத்தில் நம்பிக்கை கொண்ட, மிகப்பெரிய இதயம் கொண்ட, அகங்காரமற்ற தலைவர். அவரை இழந்துவிட்டோம் எனப் பதிவிட்டுள்ளார்.
காயத்ரி ரகுராம் இரங்கல்:
நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் அவரது சமூகவலைத்தளத்தில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். இந்த இக்கட்டான சூழலில் அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.