ETV Bharat / state

கேரள நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்! - vijay kerala landslide - VIJAY KERALA LANDSLIDE

vijay kerala landslide: கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கேரள நிலச்சரிவு, விஜய் புகைப்படம்
கேரள நிலச்சரிவு, விஜய் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 2:29 PM IST

சென்னை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கல்பட்டாவில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் பயங்கரமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு படையினர், வனத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை நிலச்சரிவில் 76 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அவரது பதிவில், “கேரளா நிலச்சரிவு குறித்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வர தேவையான நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்திடுமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன்” என்று தமது பதிவில் விஜய் கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு; 1000 பேரின் நிலை என்ன? மீட்புப் பணிகள் தீவிரம்! - KERALA LANDSLIDE

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.