தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தினமும் பள்ளி நேரம் முடிந்ததும் பள்ளியின் நுழைவு வாயில் பூட்டு போடப்பட்டு மூடப்படும்.
பூட்டுக்கு மேல் பூட்டு: இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு சத்துணவு முட்டை வந்துள்ளது. எனவே பணியாளர் முட்டையை இறக்குவதற்காக வருகை தந்துள்ளார். அப்போது ஏற்கனவே பள்ளி சார்பில் போடப்பட்டிருந்த பூட்டுக்கு மேல் மற்றொரு பூட்டும் போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர் இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் ஒரு பூட்டு தான் பள்ளி நிர்வாகம் சார்பில் போடப்பட்டது என பள்ளி தலைமை ஆசிரியரை கூறியுள்ளார்.
பள்ளிக்கு வெளியில் காத்திருந்த மாணவர்கள்: இதற்கிடையில் காலையில் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருகை தர ஆரம்பித்தனர். அவர்கள் பள்ளி நுழைவு வாயிலில் பூட்டுப் போடப்பட்டிருந்தால் பள்ளிக்குள் போக முடியாமல் நீண்ட நேரம் வெளியே நிற்கும் நிலை உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநரா, ஆரியநரா? தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் காட்டம்!
உடைக்கப்பட்ட பூட்டு: இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 1 மணி நேரம் பள்ளிக்கு வெளியில் நிற்கும் நிலை ஏற்பட்டது. அதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சேர்ந்து பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்தையடுத்து மாணவ, மாணவிகள் உள்ளே சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆழ்வார் திருநகரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த செயலை செய்தது அதே பகுதயை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் என தெரியவந்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்