ETV Bharat / state

திமுக, அதிமுக கள்ள கூட்டணி வைத்துள்ளார்கள்… டிடிவி தினகரன் - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 8:43 PM IST

TTV Dhinakaran fake alliance: திமுக, அதிமுக கள்ள கூட்டணி வைத்துள்ளார்கள், தமிழ்நாடு முழுவதும் அதிமுக மூன்றாம் இடத்தை தான் பிடிக்கும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

திமுக, அதிமுக கள்ள கூட்டணி வைத்துள்ளார்கள்

தேனி: தேசிய ஜனநாயகக் கூட்டணி தேனி தொகுதி வேட்பாளரும், அமமுக பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "என் சொந்தங்களாகக் கருதுகிற தேனி மக்களிடம் பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ராமநாதபுரம் பெரிய தொகுதி என்பதால் எனக்காகப் பிரச்சாரம் செய்ய வர முடியாத நிலையில் ஓபிஎஸ் இருக்கிறார்.

அவர் சார்பாக அவரின் குடும்பம் மற்றும் அவர் கட்சியின் நிர்வாகிகள் எனக்காகச் சிறப்பாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் விஜய் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உள்ள நிலையில், அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தான் எஜமானர்கள், யார் வர வேண்டும் என்பது மக்கள் முடிவு செய்வார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துச் சிறந்த மக்களாட்சியைக் கொடுக்கும்.

திமுக, அதிமுக கள்ள கூட்டணி வைத்துள்ளார்கள், தமிழ்நாடு முழுவதும் அதிமுக மூன்றாம் இடத்தை தான் பிடிக்கும். என் மனைவி அரசியலுக்கு வர விருப்பமில்லை, நான் வெளியூர் சென்றதால் தான் எனக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.

அரசியலுக்கு வருவது அவரவர் தனிப்பட்ட விருப்பம், என்னை விட எனது மனைவிக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இருப்பதால் எங்கள் கட்சிக்காரர்களே எனது மனைவியைப் பிரச்சாரத்திற்கு அழைக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் என்னை விட எனது மனைவி தான் ட்ரெண்டிங்கில் உள்ளார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: "இரண்டாவது முறையாக விடுதலை பெறுவதாக நினைத்து வாக்களியுங்கள்" - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.