ETV Bharat / state

மேகாலயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தருமபுரி லாரி ஓட்டுநர் மரணம்.. மனைவி கண்ணீர் மல்க அரசுக்கு விடுத்த கோரிக்கை! - truck accident

Lorry Accident in Meghalaya: மேகாலயாவில் ஏற்பட்ட லாரி விபத்தில் உயிரிழந்த தருமபுரியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டனின் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

truck accident in meghalaya
மேகாலயா லாரி விபத்தில் உயிரிழந்த தருமபுரியைச் சேர்ந்த ஓட்டுநர் உயிரிழப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 11:58 AM IST

தருமபுரி: தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த தாமரை கோழியம்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் ஜெய் ஸ்ரீ என்ற பெண் குழந்தையும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

லாரி ஓட்டுநரான மணிகண்டன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த ஒருவருடைய லாரியில் கண்ணாடி பாரம் ஏற்றிக்கொண்டு மேகலாயாவில் உள்ள சில்லாங் பகுதிக்குச் சென்றுள்ளார். இதில் மணிகண்டன் ஓட்டுநராகவும், அவரது உறவினர் பெருமாள் என்பவர் உதவியாளராகவும் சென்றுள்ளனர்.

கடந்த ஜன.24ஆம் தேதி காலை சில்லாங் அருகே சென்றபோது தாழ்வான பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் உருண்டு அருகில் உள்ள குடியிருப்புக்குள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் உதவியாளராக இருந்த பெருமாள் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உயிர் தப்பிய பெருமாள், விபத்தில் மணிகண்டன் உயிரிழந்த தகவலை அவரது வீட்டிற்கு தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டனின் மனைவி பிரியதர்ஷினி, மேகாலயாவிலிருந்து மணிகண்டனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு பணம் செலவாகும் என்பதால், உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

மேலும், லாரி உரிமையாளரும் தான் லாரியை இழந்து கடன் சுமையில் இருப்பதால் தன்னால் ஓட்டுநர் மணிகண்டனின் உடலைக் கொண்டு வருவதற்கான வசதி இல்லை எனவும், தனக்கு லாரி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் மணிகண்டனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு உதவி செய்யுமாறும் வீடியோ ஒன்றை லாரி உரிமையாளர் வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ லாரி உரிமையாளர்கள் வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டது. இதனை அறிந்த கோவில்பட்டியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர், ஒரு நபர் 99 ரூபாய் கொடுத்தால் மணிகண்டனின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர முடியும் என வீடியோ வெளியிட்டு பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்துள்ளார்.

இதனைக்கண்ட அனைவரும் கியூ ஆர் கோர்டு மூலமாக ரூ.99 செலுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மணிகண்டனின் உடலை மேகாலயாவிலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்காக சுமார் ரூ.2 லட்சத்திற்கு மேல் செலவு செய்து, விமானம் மூலம் கொல்கத்தா, பெங்களூரு வழியாக கொண்டு வந்து நேற்று (ஜன.28) மாலை மணிகண்டனின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மணிகண்டன் மனைவி பிரியதர்ஷினி 4 வயது பெண் குழந்தை மற்றும் ஒரு மாதமான பச்சிளம் குழந்தையை கையில் வைத்துக்கொண்டு எந்த ஒரு ஆதரவுமின்றி தவித்து வருகிறார். மேலும் லாரியின் உரிமையாளர் சாதாரணமான ஓட்டுநராக இருந்தவர் என்பதால், லாரியும் முற்றிலுமாக உருக்குலைந்துள்ளதால் லாரி உரிமையாளரும் மணிகண்டன் குடும்பத்திற்கு உதவி செய்ய முடியாத நிலையில் இருந்து வருகிறார்.

எனவே, பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ள மணிகண்டனின் மனைவி பிரியதர்ஷினி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளின் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அரசு ஏதேனும் நிதி உதவி வழங்க வேண்டும் எனவும், வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு மணிகண்டனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: செங்கல்பட்டு, திண்டிவனம் வழி பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்! எப்போதிலிருந்து தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.