ETV Bharat / state

தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு; தலைமை ஆசிரியை, அவரது மகன் கைது! - Trichy sexual harassment Case

Trichy sexual harassment Case: திருச்சி தனியார் தொடக்கப் பள்ளி விடுதி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, மருத்துவராக பணிபுரியும் பள்ளி தலைமை ஆசிரியை மகன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோப்பு படம், கைதானவர்
கோப்பு படம், கைதானவர் (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2024, 12:11 PM IST

திருச்சி: திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் தொடக்கப் பள்ளியில் சில மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியை மகன், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர், மாணவிகள் தங்கி படிக்கும் விடுதிக்கு அடிக்கடி சென்று, அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது போல கடந்த 6 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து குழந்தைகள் உதவி மையம் 1098 என்ற எண்ணிற்கு ரகசிய புகார் வந்ததன் அடிப்படையில், திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்தும், அதற்கு உடந்தையாக இருந்ததாக தலைமை ஆசிரியை மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் இருவரையும் நேற்று கைது செய்து காலை முதல் காவல் நிலையத்தில் வைத்து 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த தகவல் அறிந்து அங்கு வந்த பத்திரிகையாளர்களுக்கு போலீசார் எந்த வித தகவலையும் தர மறுத்தனர். அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை இருவருக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, இரவு 8.30 மணிக்குள் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்துவதாக இருந்தது. இந்த நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவர், தனக்கு இரத்த அழுத்தம் உள்ளது, சர்க்கரை நோய் உள்ளது, நெஞ்சு வலிக்கிறது என பல்வேறு காரணங்களைக் கூறி சோதனைகளை தாமதப்படுத்தினார்.

சோதனைகள் நிறைவடைந்து அவர்கள் இரவு 9 மணியளவில் வெளியே அழைத்து வரப்பட்ட போது பத்திரிகையாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் கூடியதால், போலீசார் மருத்துவர் மற்றும் தலைமை ஆசிரியையின் முகத்தை மூடியவாறு அழைத்து வந்தனர். அவர்களை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனத்தை பத்திரிகையாளர்கள் பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் நீதிமன்றத்திற்கு உள்ளே உள்ள மகிளா நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்த வந்த போது 9 மணிக்கு மேல் ஆனதாலும், மகிளா நீதிமன்ற நீதிபதி விடுமுறையில் இருப்பதாகவும் கூறினர்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் திருச்சி நீதிமன்றத்தில் இருந்து தபால் நிலையம் சாலை, டிவிஎஸ் டோல்கேட், பழைய பால் பண்ணை, காவிரி ஆறு, திருவானைக்காவல் செக் போஸ்ட், மாம்பழச்சாலை, காவிரி ஆறு பாலம், சத்திரம் பேருந்து நிலையம் வழியாக காந்தி சந்தை மார்க்கெட் நிலையத்திற்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

இந்த 20 கிலோ மீட்டர் தூரமும் 10க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர் தங்களது இருசக்கர வாகனத்தில் போலீஸ் வாகனத்தை துரத்திச் சென்று படம் பிடித்தனர். அப்போது போலீஸ் வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த தலைமை ஆசிரியை, காவலர்கள் காண்பிக்காத வண்ணம் அழைத்துச் சென்றனர். மேலும், நீதிமன்றத்தில் இருந்து காந்தி மார்க்கெட் காவல் நிலையம் 3 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஊட்டி மருமகள் மரணம்; சித்திரவதை கொலை அம்பலம்.. கணவன், கொழுந்தன் உட்பட 4 பேர் கைது! - Ooty Daughter in law murder

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.