ETV Bharat / state

“ஆதவற்றவர்களும் தீபாவளி கொண்டாடனும்” - பள்ளி மாணவி செய்த நெகிழ்ச்சி செயல்.. - DIWALI GIFTS TO THE DISABLED

தீபாவளி பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் நிலையில் பள்ளி மாணவி ஒருவர் சாலையோரம் ஆதவற்று உள்ளவர்களுக்கு சேமிப்பு பணத்தில் சேலை, கைலி, துண்டு, இனிப்பு, பிரியாணி வழங்கி நெகிழ்ச்சியடைய செய்துள்ளார்.

சாலையோரம் உள்ள ஆதரவற்றவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும்  மாணவி சுகித்தா
சாலையோரம் உள்ள ஆதரவற்வர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் மாணவி சுகித்தா (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2024, 12:37 PM IST

திருச்சி: இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை இன்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி கொண்டாட்டத்தை நாம் அனைவரும் புத்தாடை, பட்டாசு, பலகாரம் என குடும்பத்துடன் கொண்டாடி வரும் நிலையில் 11ஆம் வகுப்பு பயிலும் சுகித்தா என்ற மாணவி நாம் அனைவரும் வியக்க வைக்கும் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வை செய்துள்ளார்.

யார் இந்த சுகித்தா: தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தில் கின்னஸ் உலக சாதனை உள்ளிட்ட பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்திய திருச்சி மாநகர் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி சுகித்தா.

இல்லாதகர்களுக்கு வழங்கி மனநிறையுடன் தீபாவளி: இவர் தீபாவளி பண்டிகையை கொண்டாட இயலாத மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சாலையோர நடைபாதைகளில் வசித்து வரும் முதியோர்களுக்கு அவர் சேமித்து வைத்த பணத்தில் சேலை, கைலி, துண்டு மற்றும் இனிப்பு வகைகளுடன் 100 ரூபாய் பணமும், தனது வீட்டில் சமைக்கப்பட்ட பிரியாணி பொட்டலத்தையும் வழங்கி தீபாவளியினை மனநிறைவுடன் கொண்டாடினார்.

தனது சகோதரர் சுஜித் உடன் சேர்ந்து திருச்சி மாநகரில் காவிரி பாலம், அம்மா மண்டபம், ஸ்ரீரங்கம் சாலை உள்ளிட்ட பல இடங்களில் சென்று சாலையோரம் வசிக்கும் 150க்கும் மேற்பட்ட ஆதரவற்ற மக்களை சந்தித்து துண்டு அணிவித்து அவர்களுக்கான தீபாவளி பரிசு பொருட்களை வழங்கி மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: தீபாவளி: சென்னையிலிருந்து 3.41 லட்சம் பேர் இதுவரை பயணம்.. போக்குவரத்து அமைச்சர் தகவல்!

இது குறித்து பள்ளி மாணவி சுகித்தா கூறுகையில், “நான் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்கு சாலையோரத்தில் இருப்பவர்களுக்கு சேலை, வேட்டி, இனிப்பு, காரம், கொடுத்து வருகிறேன். இந்த ஆண்டு மூன்றாவது ஆண்டாகும். ஆதரவற்றவர்களை அரவணைத்து அவர்களுக்கு அன்பு கரம் நீட்டும் இந்த செயல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனது செயலுக்கு என் பெற்றோர்களும், உறவினர்களும் மிகுந்த பேராதரவு அளிக்கிறார்கள். என்னால் இயன்றவரை இந்த வாழ்வில் இல்லாதவர்களுக்கு உதவிகளை செய்து கொண்டிருப்பேன்” என மகிழ்வுடன் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.