ETV Bharat / state

"சிலிண்டர் விலை குறைப்பு அறிவிப்பால் எந்த பயனும் இல்லை" - திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் சாடல் - cylinder price reduction

Trichy MP Thirunavukkarasar: பிரதமர் மோடி, தேர்தல் நெருங்குவதால் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு அறிவிப்பால் எந்த பயனும் இல்லை என்று திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

Trichy MP Thirunavukkarasar Press Meet
திருச்சி எம்பி திருநாவுக்கரசர் செய்தியாளர் சந்திப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 6:17 PM IST

"சிலிண்டர் விலை குறைப்பு அறிவிப்பால் எந்த பயனும் இல்லை" - திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் சாடல்

திருச்சி: தமிழகக் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒப்புதலோடு, மாவட்டத் தலைவர்கள் பரிந்துரைப்படி, திருச்சியில் உள்ள 65 வார்டுகளுக்கும் தலைவர்கள், மாவட்ட அளவில் துணைத் தலைவர், செயலாளர், பொதுச் செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 45 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் நடந்த இந்த நிகழ்வில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பங்கேற்று பதவி நியமனக் கடிதத்தை வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த எம்.பி திருநாவுக்கரசர், "திருச்சியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதற்கான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நான் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் மீண்டும் போட்டியிட விருப்பப் படுகிறேன். இதே போல் மற்றவர்களும் விருப்பப்படலாம்.

கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்குள் பேச்சு வார்த்தை நடத்தி, தொகுதிப் பங்கீடு செய்து கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்படும். தற்போது, கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக கட்சிகளுக்குத் தொகுதி எண்ணிக்கை தான் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதி என்று அறிவிக்கவில்லை. அனைத்துக் கட்சிகளும் பேசி முடித்த பின், அந்தந்த கட்சித் தலைவர்கள் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பார்கள்.

பிரதமர் மோடி, தேர்தல் நெருங்குவதால் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விலையை உயர்த்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால், ஆட்சிக்கு வரும் கட்சி தானே கஷ்டப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அந்த சுமை காங்கிரஸ் கட்சியின் தலையில் விழும் என்ற எண்ணத்தில் அறிவித்துள்ளார். கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு அறிவிப்பால் எந்த பயனும் இல்லை. இவையெல்லாம் தேர்தல் யுக்திகள்.

தமிழகத்திற்குப் பிரதமர் மோடி நான்கு, ஐந்து முறை மட்டுமின்றி நாற்பது, ஐம்பது முறை வந்தாலும் பாஜக-வுக்கு எந்த முன்னேற்றமும் வரப் போவதில்லை" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகப் பெண்ணின் காலில் மூன்று முறை விழுந்த பிரதமர் மோடி - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.