ETV Bharat / state

75 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த நெட்வொர்க் சேவை.. திருச்சி கண்ணூத்து கிராமத்தின் ஏக்கம் தீர்த்த பிஎஸ்என்எல்! - Kannuthu BSNL 4G Mobile Service

Kannuthu Village BSNL 4G Mobile Service: திருச்சி மாவட்டம், கண்ணூத்து கிராமத்தில் 75 ஆண்டுகளுக்குப் பிறகு மொபைல் சேவையை வழங்கியிருக்கும் பிஎஸ்என்எல்-இன் செயல்பாட்டால் கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கண்ணூத்து கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல் டவர்
கண்ணூத்து கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பிஎஸ்என்எல் டவர் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2024, 5:01 PM IST

திருச்சி: திருச்சி மணப்பாறை தாலுகாவில் உள்ள கண்ணூத்து கிராமத்தில் 2,000 பேர் வசிக்கின்றனர். சுதந்திரம் அடைந்ததிலிருந்து தொலைத்தொடர்பு சேவை இல்லாமல் இருந்தது. அவசர தேவைக்கு 5 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய நிலையில் இருந்ததால், கண்ணூத்து கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

பள்ளி படிக்கும் மாணவர்களும் கோவிட் தொற்றின் பொழுது ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், இதனால் வயதானவர்கள் அவசர மருத்துவ சேவைக்கு மூன்று கிலோமீட்டருக்கு மேல் நடந்து சென்று சிக்னல் கிடைக்கும் இடத்தில் இருந்து 108 சேவையை அழைத்து வர வேண்டிய நிலை இருந்த்து. அதேபோல், இந்த ஊர் நான்கு புறமும் மலையால் சூழ்ந்துள்ளதால் பல தனியார் நெட்வொர்க் சேவைகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், செல்போன் சேவைக்கான டவர்களை அமைப்பதில் சுணக்கம் காட்டினர்.

இந்நிலையில், இந்த கிராம பகுதிக்கு கடந்த ஜூலை 16ஆம் தேதி முதல் 4ஜி சேவை கொடுக்கப்பட்டதை அடுத்து கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி கூறுகையில், "75 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் மொபைல் சேவை இல்லை. கோவிட் காலத்தில் என்னால் ஆன்லைன் வகுப்புகளில் கூட பங்கேற்க முடியவில்லை.

தற்போது கஷ்டப்பட்டு தேர்ச்சி பெற்று, 11ஆம் வகுப்பு படித்து வருகிறேன். இது நாள்வரை ஏதேனும் சந்தேகங்கள் வந்தால் தகவல்களை ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு கேட்க முடியாது. நான் தற்போது JEE தேர்வுக்கு படித்து வருகிறேன். இந்நிலையில், தற்போது இந்த பிஎஸ்என்எல் 4G செல்போன் சேவை மிக உதவிகரமாக உள்ளது” என்றார்.

மேலும் இதுகுறித்து பேசிய தீபக், “100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணிக்குச் செல்லும் வயதானவர்கள் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்த சென்று தங்களது ரேகைகளை பதிவு செய்யும் நிலை இருந்தது. அப்பொழுது, கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும் இது குறித்து தகவல் கொடுத்தபொழுது, தற்காலிகமாக பிஎஸ்என்எல் வாகனத்தை நிறுத்தி மொபைல் சேவை கொடுத்தனர்.

தற்பொழுது நிரந்தரமாக 4G நெட்வொர்க் சேவையை எங்கள் ஊருக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கியுள்ளது. இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அனைத்து அவசர உதவிகளுக்கும் இனி 3 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியது இல்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு தேடி தந்துள்ள கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் பிஎஸ்என்எல் பொது மேலாளர் உள்பட அதிகாரிகளுக்கு நன்றி” எனக் கூறினார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய கண்ணூத்து ஊராட்சி தலைவர் பெரியசாமி, “சுதந்திரம் அடைந்ததிலிருந்து எங்களுக்கு போன் வசதி இல்லை. மொபைல் போன் பேச வேண்டியது என்றாலும் 3 கீலோமீட்டர் கடந்து சென்று தான் பேச முடியும். நாங்கள் நீண்ட காலமாக தனியார் நெட்வொர்க் செல்போன் டவரை அமைத்து தருவதாக கூறினார். ஆனால் எந்த மாற்றமும் அடையவில்லை, இந்நிலையில், தற்போது பிஎஸ்என்எல் 4G நெட்வொர்க் சேவை கொடுத்துள்ளது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 10 கிராமத்தில் உள்ள பலதரப்பட்ட மக்கள் தங்கள் பட்ட கஷ்டங்களை இந்த டவர் போக்கிவிட்டது” எனக் கூறியுள்ளார்.

பின் இதுகுறித்து பேசிய பிஎஸ்என்எல் துணை பொது மேலாளர் விஜயபாஸ்கரன், “இந்த மணப்பாறை தாலுகாவில் உள்ள மருங்காபுரி அருகே கண்ணூத்து கிராமமானது சுற்றிலும் மலைப்பகுதிகள் நிறைந்தது. கோவிட் தொற்றின் பொழுது மிகவும் சிரமப்பட்டனர். அவர்களுக்காக தற்காலிகமாக முதலில் வாகனத்தில் பிஎஸ்என்எல் டவர் அமைத்துக் கொடுக்கப்பட்டது. அது 2ஜி, 3ஜி சேவை மட்டும் தான். இதை அடுத்து நிரந்தரமாக பிஎஸ்என்எல் டவர் அமைக்கும் பணியில் பொது மேலாளர் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டோம்.

அதற்கான கேபிள்கள் பதிக்கும் பணியில் தடைகள் ஏற்பட்டது. வனப்பகுதியில் இருப்பதால் அனுமதி கிடைக்கவில்லை, பின் தமிழ்நாடு அரசு உதவி உடன் வழங்கவில்லை என பல போராட்டங்களை தாண்டிதான் தற்பொழுது டவர் அமைக்க இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த ஊருக்கு 4G சேவை நெட்வொர்க் கிடைத்துள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி. பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் இதை ஒரு மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கிறோம். ஜூலை 16ஆம் தேதி முதல் அப்பகுதி மக்களுக்கு 4ஜி சேவை அளிக்கப்பட்டு வருகிறது. கொடுக்கப்பட்ட நாளிலேயே அதிகமான சிம் கார்டுகள் விற்பனையாகியது. எந்த ஊரிலும் இல்லாத அளவுக்கு ஒரு டவரிலிருந்து மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருவாய் வரக்கூடிய அளவிற்கு தற்பொழுது அந்த பிஎஸ்என்எல் டவர் செயல்பட்டு வருகிறது” எனக் கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: செப்டம்பர் 14-க்குள்ள இத செஞ்சிருங்க.. இல்லேன்னா சிரமம் தான்.. ஆதார் அட்டையை புதுப்பிப்பது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.