ETV Bharat / state

திருச்சி மக்களவைத் தொகுதி; வாக்குப்பதிவு நாளில் 21 வழக்குகள் பதிவு - மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தகவல்! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 4:57 PM IST

Trichy constituency: திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்ற நாளில் விதிமீறல்கள் தொடர்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என திருச்சி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரதீப்குமார் கூறியுள்ளார்.

திருச்சி தொகுதியில் நேற்று வாக்குப்பதிவு நாளில் 21 வழக்குகள் பதிவு

திருச்சி: 18வது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் நேற்று ஒரே கட்டமாக, நேற்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் விவி பேட் சீல் வைக்கப்பட்டு, வாக்குச்சாவடியில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையமான ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, கட்டுப்பாட்டு இயந்திர அறையில் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் பொதுப் பார்வையாளர் தினேஷ்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அனைத்துக் கட்சிகளின் முன்பு சீல் வைத்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரதீப்குமார், "ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலிருந்தும் வாக்கு இயந்திரங்கள், நேற்று ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் 67.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கூடுதலாக மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்திருந்தால், கண்டிப்பாக வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கும். நகர்ப்புறப் பகுதிகளில் வாக்கு சதவீதம் குறைவாகத்தான் உள்ளது. நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, சில கோளாறுகள் காரணமாக விவிபேட் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள் சில மாற்றம் செய்யப்பட்டது. திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் விதிமீறல்கள் தொடர்பாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த நேரத்தில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் 5.8 கோடி, தங்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் 8.6 கோடி வரை பறிமுதல் செய்துள்ளோம். அனைத்திற்கும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறையினர் அதற்கான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் ஒரு அடுக்கு பாதுகாப்பில் துணை ராணுவக் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் இருப்பர்.

24 மணி நேரமும் சிசிடிவி கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு நாளில் சில நிறுவனங்கள் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக, ட்விட்டரில் கூட விடுமுறை வழங்காதது குறித்து புகார் வந்திருந்தது. உடனடியாக அந்த நிறுவனத்தை அணுகி, விடுமுறை விடச் சொல்லி ஏற்பாடு செய்தோம். ஒரு வேட்பாளர் வாக்குக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது குறித்த கேள்விக்கு, அப்படியே புகார் வந்தாலும், அதற்குரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "பணம் கொடுக்க வேண்டும் என்றால் எப்படி வேண்டுமானாலும் கொடுக்கலாம்” - திருச்சி சூர்யா சிவா பரபரப்பு பேச்சு! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.