ETV Bharat / state

"போதைப் பொருள் குறித்து தகவல் கொடுத்தால் ஒன் டே கலெக்டர்"- திருச்சி ஆட்சியர் அதிரடி! - TRICHY DRUG PROHIBITION ACTIVITIES - TRICHY DRUG PROHIBITION ACTIVITIES

DRUG AWARENESS ON STUDENTS: திருச்சி மாவட்டம் கலையரங்கத்தில் 'போதைப்பொருள் எதிர்ப்புகுழு’ என்ற தலைப்பில் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாணவர்கள் போதை பொருள்களை தடுக்கும் குழுக்களாக செயல்பட வேண்டும் எதாவது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்கப்பட்டால் அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் அவ்வாறு அதிக விழிப்புணர்வுடன் செயல்படுபவர்களுக்கு ஒரு நாள் ஆட்சியராக பதவி வழங்கப்படும் என்றார்.

திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார்
திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் (CREDITS- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 23, 2024, 5:24 PM IST

திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் திருச்சி மாவட்ட உணவு பாதுக்காப்பு துறை மற்றும் பள்ளிகல்வி துறை சார்பாக 'போதைப்பொருள் எதிர்ப்புகுழு’ என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகர காவல்துறை ஆணையர் காமினி, மாவட்ட கல்விதுறை அலுவலர்கள் மற்றும் உணவு பாதுக்காப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

மாணவர்களும் விழிப்புணர்வும்: அப்போது மேடையில் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், "தமிழ்நாட்டில் போதை பழக்கத்தை முற்றிலும் ஒழித்திட வேண்டும். அதற்கு மாணவர்கள் அது குறித்த விழிபுணர்வுடன் இருக்கு வேண்டும். ஏன் கடவுளே நேரில் வந்து சொன்னாலும் மாணவர்கள் தீமை செய்யக்கூடாது. மாணவர்கள் நினைத்தால் இந்த சமுதாயத்தை புரட்டிப் போட முடியும்.

ஒழுக்கமே சிறந்தது: ஒரு மாணவன் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தாலும் அவனால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். ஆனால் ஒழுக்கம் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் எந்த சாதனையும் படைத்ததாக சரித்திரமே கிடையாது. மாணவர்கள் இந்த சமுதாயத்தில் இருக்கும் தீமைக்கும், தீய பழக்கத்திற்கும் அடிமையாகக் கூடாது.

நமது தமிழர்கள் உலகம் முழுவதும் உள்ளார்கள், எங்கு சென்றாலும் அவர்களை நாம் காண முடியும். இதனால் இந்த உலகத்தை ஆளும் அளவிற்கு இந்தியர்கள் திறமைவாய்ந்தவர்கள். அதில் குறிப்பாக தமிழர்கள் மிக கூர்மையானவர்கள். ஆனால் தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அதிக அளவில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். இவர்களை அதிலிருந்து மீட்டு புதிய சமுதாயத்தை படைக்க வேண்டும்.

போதைக்கு காரணம் தேடுதல் கூடாது: போதை பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். எவர் ஒருவர் எல்லாவற்றிர்கும் காரணம் சொல்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெற முடியாது. எனவே திருச்சியில் இருக்கும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளில் எந்த காரணத்தை கொண்டும் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அரசு உத்தரவை மீறி கடைகளில் போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாணவர்களே விழிப்புணர்வு குழுக்கள்: திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை 8 போதைப்பொருள் தடிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு ஒரு நாளைக்கு 250 கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது ஒவ்வொரு மாணவர்களும் ஒரு குழுவுக்கு சமமானவர்கள், போதை பொருளை விற்பனை செய்யும் கடைகள் பற்றி மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக 9626839595 என்ற வாட்ஸ் அப் எண்னை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிக்கும் மாணவர்கள் அல்லது பொதுமக்கள் யாராக இருந்தாலும் அவர்களை பற்றிய விவரங்கள் பாதுகாக்கப்படும்.

ஒரு நாள் ஆட்சியராகலாம்: போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக திருச்சியை உருவாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும். போதைப்பொருள் குறித்து அதிக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் தகவல் கொடுப்பவர்களுக்கு ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் இருக்கை வழங்கப்படும், அன்று ஒரு நாள் அவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நான் செயலாற்றுவேன்.

நேற்று இரவு 11 மணி அளவில் கிடைத்த தகவல் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் உடன் பச்சமலை பகுதியில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டோம். அப்போது 250 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டறியப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களை அழைத்து இனிவரும் காலங்களில் ஒரு சொட்டு கள்ளச்சாராயம் கூட இந்த பகுதியில் உருவாக்கவோ, விற்பனையோ செய்யக்கூடாது என உறுதிமொழி ஏற்க வைத்தோம்.

மேலும் அப்பகுதியில் திருமண மண்டபம் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அடுத்த ஒரு வருடத்திற்கு இந்த பகுதியில் கள்ளச்சாராயம் இல்லை என்ற நிலையை உருவாக்கினால் நிச்சயம் திருமண மண்டபம் கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்துள்ளேன். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவம் போன்று இனி ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடக்கக்கூடாது" எனக் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விவகாரம்; முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் கைது!- சிபிசிஐடி விசாரணையும் பகீர் தகவல்களும்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.