ETV Bharat / state

கோவையில் காட்டு யானைக்கு சிகிச்சை: தொடர் கண்காணிப்பில் வனத்துறை! - Sicked wild elephant treatment

Coimbatore Elephant: கோவை அருகே குட்டியுடன் இருந்த தாய் யானைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், வனத்துறை அதிகாரிகள் சிகிச்சை வழங்கி தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 10:33 PM IST

கோவை: கோவை மாவட்டம், மருதமலை ஒட்டிய வனப்பகுதியில் பொதுவாகவே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதாகவும், இவை இரவு நேரங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வரும் சூழலில், வழக்கம்போல் மருதமலை ஒட்டிய திடீர் குப்பம் வனப்பகுதியில் அவர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு யானை ஒன்று பிளிறும் சத்தம் கேட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பதை பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க: தூங்கியவரை எழுப்பியதால் கொலை.. சென்னையில் கொடூர சம்பவம்! - Koyambedu Murder

சுமார் 40 வயதுமிக்க அந்த பெண் யானை உடல்நிலை சரியில்லாமல் தனது 3 மாத ஆண் குட்டியுடன் அங்கு இருந்துள்ளது. இதனை அடுத்து, இது குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு யானைக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பழங்கள் உள்ளிட்டவை உணவாகவும் கொடுக்கப்பட்டு, அந்த யானை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அந்த யானையின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், யானையின் உட்லநலக் குறைவுக்கான காரணங்கள் தெரியவரும் என கூறப்படுகிறது. மேலும், யானைக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வரும் பகுதி இரவு நேரங்களில் யானைகள் நடமாடும் பகுதி என்பதால், வனத்துறை அதிகாரிகள் தூரத்தில் இருந்து அந்த யானை மற்றும் அதன் குட்டியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தேனியில் காரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. 5 பேர் மீது வழக்குப்பதிவு! - Theni Sexual Harassment

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.