ETV Bharat / state

தஞ்சாவூரில் தலைமறைவாக இருந்த டிராவல்ஸ் உரிமையாளரின் மனைவி கைது!

பண மோசடி வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரின் மனைவியை தஞ்சையில் வைத்து கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டடுள்ள பெண்
கைது செய்யப்பட்டடுள்ள பெண் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2024, 7:41 PM IST

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை நந்தனம் பகுதியைச் சேர்ந்தவர் ஹக்கீம் (42). இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில், தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்குத் தொகை தருவதாகவும், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூபாய் 2,500 முதல் லாபத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்து இருந்தார்.

இந்த கவர்ச்சிகரமான திட்டத்தை நம்பி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ஒரு லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்tதுள்ளனர். தொடக்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பங்குத் தொகையாக வழங்கி வந்த ஹக்கீம், கடந்த 2022ஆம் ஆண்டில் பங்குத்தொகை வழங்காமல், தனது மனைவி பாத்திமா உடன் தலைமறைவானார்.

இதையும் படிங்க: சுமார் ரூ.3 கோடியை பறிகொடுத்த முதியவர்; மிஞ்சியது ரூ.53 லட்சம் தான்!

இதனால் பாதிக்கப்பட்டவர்கள், கடந்த 2022ஆம் ஆண்டு தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். ஆனால், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை தாமதமானதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்கள் பலரும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுக்களை அளித்தனர். பின்னர், இந்த வழக்கு மாவட்ட குற்றப் பிரிவிலிருந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கு கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாற்றம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி பூரணி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செந்தமிழன் ஆகியோர் அடங்கிய குழுவினர், கோவை மாவட்டம் தொப்பம்பட்டியில் தங்கி இருந்த ஹக்கீமை கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர். இதை அறிந்த அவரது மனைவி பாத்திமா (35) தலைமறைவு ஆனார்.

தொடர்ந்து பாத்திமாவை போலீசார் தேடி வந்தனர். இதனை அறிந்த பாத்திமா, தஞ்சை, கோவை, திருச்சி என பல ஊர்களில் மாறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் பகுதியில் பாத்திமா இருப்பதை போலீசார் அறிந்து கொண்டனர்.

இதனையடுத்து, கடந்த 28ஆம் தேதி பாத்திமாவை கைது செய்த போலீசார், பின்னர் அங்கிருந்து மதுரைக்கு அழைத்து வந்து, பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.