ETV Bharat / state

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு? மருத்துவர்களுக்கு பயிற்சித் திட்டம்! - monkey pox

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 10:19 PM IST

Monkey Pox: குரங்கு அம்மை காய்ச்சலை பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளதையடுத்து, வைரஸ் கண்காணிப்பு நெறிமுறையை மேம்படுத்தவும், மருத்துவர்களுக்கான பயிற்சித் திட்டத்தை நடத்தவும் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு
கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: உலக சுகாதார நிறுவனம், குரங்கு அம்மை காய்ச்சல் நோயை சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசர நிலையாக (PHEIC) அறிவித்ததைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் சுகாதார வசதிகளின் தயார் நிலையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் இன்று ஆய்வு நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், குரங்கு அம்மை காய்ச்சல் நோயின் கண்காணிப்பின் நிலை, தனிமைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான நிலையான செயல்பாட்டு நெறிமுறை குறித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு விவாதித்தார்.

மேலும், மத்திய அரசு குரங்கு அம்மை காய்ச்சலை பரிசோதிப்பதற்கான அங்கீகரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட மையமாக சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட்டை தேர்வு செய்துள்ளது. ஆனால், குரங்கு காய்ச்சலால் பாதிப்புகள் இதுவரை மாநிலத்தில் பதிவாகவில்லை. இருப்பினும், கண்காணிப்பு நெறிமுறையை மேம்படுத்தவும், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கான பயிற்சித் திட்டத்தை நடத்தவும், மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக மருத்துவத் துறை, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகத்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி, இந்நோய் குறித்து தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில், மருத்துவத் துறையின் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு நாளை தொடக்கம்! - MBBS BDS COUNSELING DATES

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.