சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் போலீஸ், பிரஸ் உள்ளிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டி முறைகேட்டில் ஈடுபட்டுவதாக காவல் துறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு நம்பர் பிளேட்டுகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களை அகற்றி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
அதில் கடந்த மே இரண்டாம் தேதி முதல் இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள்,போலீஸ், பத்திரிகையாளர்கள் என யாரும் ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என உத்தரவிட்டனர்.இதனை தொடந்து இதுவரை சுமார் 4000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவலர்களின் வாகனங்கள் அதிரடியாக சோதனைக்கு உட்படுத்தினர். இதில் நம்பர் பிளேடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த வாகனத்திலிருந்து ஸ்டிக்கர்களை அகற்றி 500 ரூபாய் அபரதம் விதித்து இருசக்கர வாகனத்தின் இருக்கையில் அபராத செல்லாணை ஒட்டி சென்றனர்.
இதில் சுமார் 7 இருசக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாகவும் போக்குவரத்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டுவது யாராக இருந்தாலும் அந்த வாகன ஓட்டி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க:நகை வாங்குவது போல் நடித்து திருடிய பெண்.. போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம்!