ETV Bharat / state

வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பூக்கும் ஸ்கேப் மலர்.. ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! - BLOOMING SCAPE PLANT

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே பூக்கும் ஸ்கேப் தாவரத்தை சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்து வருகின்றனர்.

ஸ்கேப் தாவரங்கள்
ஸ்கேப் தாவரங்கள் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2024, 3:02 PM IST

Updated : Oct 27, 2024, 4:17 PM IST

நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம், உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ள மாவட்டமாகும். குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவைக் காண, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், பல்வேறு நாடுகளில் இருந்து அரிய வகை மலர்கள், மரங்கள், மூலிகைச் செடிகள் என நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள 'டோரியான்தஸ்' கற்றாழை குடும்பத்தைச் சேர்ந்த ஒரே பூக்கும் தாவரம் ஆகும். இது ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படுகிறது. இந்த தாவரம் 3 மீட்டர் முதல் 5 மீட்டர் உயரம் வரை வளரும். இது ஸ்கேப் எனப்படும் பூக்கும் தண்டு கொண்டது.

இதையும் படிங்க: தவெக தொண்டர்கள் இருவர் பலி..! சென்னையில் இருந்து மாநாட்டிற்கு செல்லும் வழியில் நேர்ந்த சோகம்..!

ஆரஞ்சு மற்றும் சிவப்பு மலர்களைக் கொண்ட இந்த தாவரம் வாழ்நாளில் ஒரு முறை பூக்கும் தன்மை கொண்டது. இதில் பூக்கள் வருவதற்கு 13 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது பூத்துள்ள இந்த மலரை சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் செடியின் அருகே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது தற்போது பூங்காவில் பூத்துள்ளது சுற்றுலாப் பயணிகளைக் வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 27, 2024, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.