ஈரோடு: ஈரோடு அருகே புங்கம்பாடி பகுதியை சேர்ந்தவர் பரத். ஓட்டுநரான இவர் சொந்தமாகச் சுற்றுலா வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மூலப்பாளையத்தில் இருந்து சேலம் வரை சுபநிகழ்ச்சிக்காக, வாடிக்கையாளரை அழைத்துச் செல்ல வீட்டில் இருந்து வாகனத்தை எடுத்துக் கொண்டு, பெருந்துறை சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேப்பம்பாளையம் பகுதியில் வாகனத்தின் முன்பகுதியில் இருந்து தீடிரென கரும்புகை வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சாலையோரம் வாகனத்தை நிறுத்திய பரத், கரும்புகையை அணைக்க அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இருந்து தீயணைப்பு கருவியைக் கொண்டு முயற்சி செய்தார்.
அதற்குள் கரும்புகையுடன் பற்றி எரிந்த தீயானது வாகனம் முழுவதும் பரவி எரியத் தொடங்கியது. இதையடுத்து வாகனத்தின் உரிமையாளர் பரத் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருகை புரிந்த, தாலுக்கா போலீசார் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பைச் சரி செய்தனர். மேலும் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகனத்தின் முன்பகுதியில் உள்ள பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும் தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த பரத்தின் குடும்பத்தினர் வாழ்க்கையின் முக்கிய ஆதாரமாக இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனம் கண்முன்னே எரிந்ததைப் பார்த்துக் கதறி அழுதனர். இது காண்போரைச் சோகத்தில் ஆழ்த்தியது. தீவிபத்து குறித்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'மாட்டிக்கினாரு ஒருத்தரு'.. ஓடும் பைக்கில் காதல் ஜோடி ரொமான்ஸ்.. பாடம் புகட்டிய திருப்பூர் போலீஸ்!