ETV Bharat / state

ஊட்டி மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து; 7 வயது சிறுவன் உயிரிழப்பு! - Tourist bus accident in Ooty

Ooty tourist bus accident: பெரம்பலூரில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்த தனியார் சுற்றுலா மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றுலா பேருந்து விபத்து புகைப்படம்
சுற்றுலா பேருந்து விபத்து புகைப்படம் (Credits - ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 9:41 PM IST

Updated : May 3, 2024, 10:15 PM IST

கோயம்புத்தூர்: சென்னை வியாசர்பாடி பெரம்பூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ஒரு குழுவாக 16 பெரியவர்கள், 15 குழந்தைகள் என 31 பேர் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி, நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு, மே 1ஆம் தேதி மேட்டுப்பாளையம் வந்தடைந்துள்ளனர்.

பின்னர், ஏற்கனவே ஆன்லைன் மூலம் பதிவு செய்த சுற்றுலா வாகனத்தில் (மினி பேருந்து) இன்று உதகைக்குச் சென்றுள்ளனர். ஊட்டியை சுற்றிப் பார்த்து விட்டு மாலை 5 மணியளவில் ஊட்டியில் இருந்து தாங்கள் வந்த சுற்றுலா வாகனத்தில் மேட்டுப்பாளையம் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், சுமார் 7 மணியளவில் வாகனம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில், பவானிசாகர் அணை காட்சி முனை அருகே வந்த போது, சுற்றுலா வாகனம் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வாகனத்தில் இருந்த ஓட்டுநர் உள்பட 32 பேரும் பலத்த காயமடைந்தனர்.

பின்னர், விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்கள் ஒவ்வொருவராக மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். படுகாயமடைந்த 6 பேருக்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மீதமுள்ள குழந்தைகள், பெண்கள் உள்பட 25க்கும் மேற்பட்டோருக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பலத்த காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பலனின்றி 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் பெறும் வழி..! அரசு வெளியிட்ட விளக்கம் - Epass To Visit Ooty And Kodaikkanal

Last Updated : May 3, 2024, 10:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.