ETV Bharat / state

இன்னும் ஒருநாள் தான் இருக்கு... அலர்ட் செய்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு! - Medical College Admission

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 8:14 PM IST

Medical College Admission: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பம் செய்ய நாளை (ஆக.9) கடைசி நாள் என்று தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: விளையாட்டுப் பிரிவின் கீழ் சேர்வதற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. எனவே, விளையாட்டு வீரர்கள் நேரில் கலந்துக் கொண்டு சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் 2024 - 25ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஜூலை 31 ந் தேதி முதல் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பெறப்படுகின்றன. மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்சி ஏ மற்றும் எஸ்டி வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-24ஆம் கல்வி ஆண்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரியில் 5 ஆயிரத்து 550 இடங்களும், இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும், 21 தனியார் மருத்துவக் கல்லூரியில் 3 ஆயிரத்து 400 இடங்களும் மூன்று தனியார் பல்கலைக்கழக கல்லூரிகளில் 450 இடங்கள் என 9 ஆயிரத்து 50 இடங்களில் எம்பிபிஎஸ் படிப்பிலும், பிடிஎஸ் படிப்பில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 1,950 இடங்கள் என மொத்தமாக 2 ஆயிரத்து 200 இடங்களும் உள்ளன.

இந்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 851 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 38 இடங்களும் நிரப்பப்படும். இதற்கான கலந்தாய்வு தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவினால் நடத்தப்படும். மீதம் உள்ள இடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கை குழு மூலம் ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில் மாணவர்கள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி மதியம் 5 மணி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம். மேலும், விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்துள்ள மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பெற்ற அசல் சான்றிதழ்கள், நீட் 2024 மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றுடன் கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் அலுவலகத்தில்ஆகஸ்ட் 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கலந்துக் கொள்ள வேண்டும்.

சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக் கொள்ளாதவர்களுக்கு விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படாது. தமிழ்நாட்டில் விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 19 ந் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படிப்பில் சேர்வதற்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரையில் 38 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்ப்பதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் மாணவர் சேர்க்கையான கலந்தாய்வு ஆகஸ்ட் 3 வது வாரம் (ஆகஸ்ட் 21ஆம் தேதி) தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் பயணம்! - Udhayanidhi Stalin in paris

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.