ETV Bharat / state

மூணாறு புதிய சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம்.. எந்தெந்த வாகனங்களுக்கு எவ்வளவு கட்டணம்? - munnar new toll plaza

மூணாறில் உள்ள புதிய சுங்கச் சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூலிப்பது நடைமுறைக்கு வந்துள்ளது. உள்ளூர் மக்களுக்கு மாதாந்திர பாஸ்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

மூணாறு சுங்க சாவடியில் கட்டணம்
மூணாறு சுங்க சாவடியில் கட்டணம் (credit - ETV Bharat Tamil Nadu)

மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகே இன்று முதல் புதிய சுங்கச்சாவடியில் வாகனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிதாக நிறுவப்பட்ட இந்த சுங்கச்சாவடி, கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை 85 இல், மூணாறு மற்றும் தேவிகுளம் ஆகிய இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு இடையே, கேப் ரோடு சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.

முன்னதாக, தேசிய நெடுஞ்சாலையின் மூணாறு - போடிமெட்டு பிரிவில் 41.78 கிலோமீட்டர் தூரத்திற்கு 371.83 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்பட்டன. இங்கு ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாகனங்களுக்கு விதிக்கப்படும் சுங்கக்கட்டணம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

சுங்கச்சாவடியிலிருந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் வணிகம் அல்லாத வாகனங்களைக் கொண்ட குடியிருப்பாளர்கள் 340 ரூபாய் செலுத்தி மாதாந்திர பாஸ் மூலம் பயனடையலாம்.

டோல் கட்டண விவரங்கள்

கார்கள், ஜீப்புகள் மற்றும் பிற சிறிய வாகனங்களுக்கு:

ஒரு முறை பயணம்: 35 ரூபாய்
திரும்பும் பயணம்: 55 ரூபாய்

இருவழிப் பயணங்களுக்கான மாதாந்திர பாஸ்: ரூ.1,225

மினி பேருந்துகள்

ஒரு முறை பயணம்: 60 ரூபாய்
திரும்பும் பயணம்: 90 ரூபாய்
மாதாந்திர பாஸ்: 1,980 ரூபாய்

பேருந்துகள் மற்றும் டிரக்குகளுக்கு:

ஒரு முறை பயணம்: 125 ரூபாய்
திரும்பும் பயணம்: 185 ரூபாய்
மாதாந்திர பாஸ்: 4,150 ரூபாய்

கனரக வாகனங்களுக்கு:

ஒரு முறை பயணம்: 195 ரூபாய்
திரும்பும் பயணம்: 295 ரூபாய்
மாதாந்திர பாஸ்: 6,505 ரூபாய்

ஏழு அச்சுகளுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு:

ஒரு முறை பயணம்: 240 ரூபாய்
திரும்பும் பயணம்: 355 ரூபாய்
மாதாந்திர பாஸ்: 7,920 ரூபாய்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.