ETV Bharat / state

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்! - chennai meteorological center

TN Weather update: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

TN Weather update
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 2:03 PM IST

சென்னை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மறுதினம் (பிப்.17) முதல் வருகிற 21ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்) ஏதுமில்லை. மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கையும் ஏதுமில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீடு; தமிழக அரசு உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.